ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: ​ராஜீவ்​காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மதிப்​பிலான மருத்​துவ உபகரணங்​களை மக்​கள் பயன்​பாட்​டுக்​கு, சுகா​தார துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார்.

சென்​னை, ராஜிவ்​காந்தி அரசு மருத்துவமனையில், ரூ.7.39 கோடி மதிப்​பிலான மருத்​துவ உபகரணங்​கள், 108 ஆம்​புலன்ஸ் சேவையை மேம்​படுத்​தும் வித​மாக வாட்ஸ் அப் செயலியை மக்​கள் பயன்​பாட்​டுக்​காக சுகா​தார துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார்.

அத்​துடன், ‘ஜெ.எம்​.எம்​.சி.’ என்ற மருத்​துவ இதழை தொடங்கி வைத்​ததுடன், ரூ.60 லட்​சம் மதிப்​பில், கிருஷ்ணகிரி, திரு​வாரூர் மாவட்​டங்​களில், இரண்டு பல்​நோக்கு நடமாடும் கண் மருத்​துவ வாக​னங்​களை தொடங்கி வைத்​தார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறுகையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மதிப்​பீட்​டில் பல்​வேறு புதிய அதிநவீன மருத்​துவ உபகரணங்​கள் மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளன.

இதில் ரூ.3.80 கோடி மதிப்​பீட்​டில் உயர்​நிலை வாஸ்​குலர் சி-ஆர்ம் கருவி மற்​றும் ஹைப்​ரிட் ரத்த நாள அறுவை சிகிச்சை அரங்​கம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வசதி மூலம் ரத்த நாள அடைப்பு மற்​றும் பெருந்​தமனி வீக்​கம் போன்ற சிக்​கலான நோய்​களுக்கு சர்​வ​தேச தரத்​திலான எண்​டோ​வாஸ்​குலர் சிகிச்​சையை குறைந்த நேரத்​தில் வழங்க முடி​யும்.

ரூ.2.03 கோடி மதிப்​பீட்​டில் முதுகுத் தண்டு எண்​டோஸ்​கோப்பி சிகிச்சை முறை தொடங்​கப்​பட்​டுள்​ளது. இது குறைந்த காயம் மற்​றும் விரை​வான மீட்பு அளிக்​கக்​கூடிய பாது​காப்​பான முறை​யாகும்.

ரூ.1.56 கோடி மதிப்​பீட்​டில் 13 வகை​யான உயர்ரக மயக்க மருந்து இயந்​திரங்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளன. தேசிய அளவில், 1.99 சதவீதம் பார்வை இழப்பு விகித​மாக உள்​ளது. தமிழகத்​தில், 1.18 சதவீத​மாக உள்​ளது. 97 அரசு மருத்துவமனைகளில் கண் சிகிச்சை மையம் செயல்​பட்டு வரு​கிறது என்றார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மருத்துவ உபகரணங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in