பாதி வேக வைத்த கோழி இறைச்சியை உண்ண வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Updated on
1 min read

சென்னை: பாதி வேக​வைத்த கோழி இறைச்சியை உண்ண வேண்​டாம் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வேண்​டு​கோள் விடுத்​தார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பறவைக் காய்ச்​சல் தொடர்​பாக மாநில அரசுகளுக்கு மத்​திய சுகா​தா​ரத் துறை அறி​வுறுத்​தல் கடிதம் அனுப்​பி​யுள்​ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகசுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

காகங்​களோ கோழி போன்ற பறவை​களோ திடீரென்று காய்ச்​சல் பாதிப்பு ஏற்​பட்டு இறந்​ததை பார்த்​தால், உடனடி​யாக அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, ஆழமான குழி​யில் புதைக்க வேண்​டும். கோழி போன்​றவை திடீரென இறந்​து​போ​னால், இறந்த கோழியை யாரும் சாப்​பிடக் கூடாது.

மேலும் கோழி இறைச்​சியை உண்​பவர்​கள், நன்​றாக சமைத்த பின்பே அதை உண்ண வேண்​டும். பாதி வேக வைத்த இறைச்​சியை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்​டும். இவ்வாறு தமிழக சுகா​தா​ரத் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தில் மாவட்ட அளவி​லான சுகா​தார அலு​வலர்​கள் இந்த அறி​வுறுத்​தல்​களை அந்ததந்த பகுதிகளில் வழங்கி வரு​கிறார்​கள். கடந்த 9-ம் தேதி தலைமைச் செய​லர் அனைத்து அலு​வலர்​களு​டன் கூட்​டத்தை நடத்​தி, இதுகுறித்து ஆய்வு செய்​திருக்​கிறார். தமிழகத்​தில் பறவைக் காய்ச்​சலால் மனிதர்​களுக்கு எந்​த​வித பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. ஆனாலும், மக்​கள் விழிப்​புடன் இருக்க வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>அமைச்சர் மா.சுப்பிரமணியன்</p></div>
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவீதம் அதிகரிப்பு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in