தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவீதம் அதிகரிப்பு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவீதம் அதிகரிப்பு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: ‘தமிழகத்​தில் நடைபெற்று வரும் திமுக ஆட்​சி​யில் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் 33 சதவீதம் அதி​கரித்​துள்​ளன’ என்று பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

தமிழகத்​தில் பெண்​களுக்கு எதி​ராக நடை​பெறும் வன்​கொடுமை, சட்ட ஒழுங்கு சீர்​கேடு உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​களில் தமிழக அரசு அலட்​சி​யம் காட்டி வரு​வ​தாக தேசிய ஜனநாயக கூட்​டணி கட்​சிகளின் மகளிர் அணி சார்​பில் தமிழகம் முழு​வதும் 38 மாவட்​டங்​களில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

சென்​னை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன் தலைமை தாங்​கி​னார். அதி​முக மகளிர் அணி மாநில செய​லா​ளர் வளர்​ம​தி, அமைப்புச் செய​லா​ளர் கோகுல இந்​தி​ரா, பாஜக மாநில துணைத் தலை​வர் நடிகை குஷ்பு, மகளிர் அணி மாநிலத் தலை​வர் கவிதா ஸ்ரீ​காந்த் மற்​றும் தமா​கா, பாமக, அமமுக உள்​ளிட்ட கூட்​டணிக் கட்சிகளின் மகளிர் அணி நிர்​வாகிகள் கலந்து கொண்​டனர்.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் வானதி சீனி​வாசன் பேசி​ய​தாவது: எம்​.ஜி.ஆர், ஜெயலலிதா மற்​றும் பழனி​சாமி ஆட்சி வரை, தமிழகத்​தின் ஒவ்​வொரு பெண்​ணும் இது நமக்​கான ஆட்சி என்று நிம்​ம​தி​யாக இருந்​தார்​கள். ஆனால், இன்று ‘தி​ரா​விட மாடல்’ என்று மார்​தட்​டிக் கொள்​ளும் இந்த ஆட்​சி​யில், பல்​கலைக்​கழகங்​கள் முதல் பேருந்து நிறுத்​தங்​கள் வரை எங்​குமே பெண்​களுக்​குப் பாது​காப்​பில்​லாத சூழல் நிலவுகிறது.

பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் 33 சதவீதம் அதி​கரிப்​பு. குழந்​தைகளுக்கு எதி​ரான வன்​கொடுமை​கள் 52 சதவீதம் உயர்​வு, குடும்ப வன்​முறை வழக்​கு​கள் 63 சதவீதம் அதி​கரிப்​பு, பாலியல் குற்​றங்​கள் 109 சதவீதம் உயர்ந்து தமிழகத்​தைப் பின்​னோக்​கித் தள்​ளி​யுள்​ளது.

பிரதமர் நரேந்​திர மோடி பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்​டைச் சட்​ட​மாக்​கி​னால், இங்கே ஸ்டா​லின் ஆட்​சி​யில் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் 33 சதவீதம் அதி​கரித்​துள்​ளன. இந்த 2026-ம் ஆண்டில் இந்த ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைத்​து​விட்​டு, இதே இடத்​தில் நாம் வெற்றி விழாவைக் கொண்​டாட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நடிகை குஷ்பு பேசும்​போது, ‘‘அ​தி​முக ஆட்​சி​யில் ஏழைப் பெண்களுக்​குத் திருமண உதவித்​தொகை​யும், தாலிக்கு தங்​க​ம் திட்டமும் நடைமுறையில் இருந்தது. அந்​தத் திட்​டம் இன்று முடக்​கப்​பட்​டுள்​ளது. ‘போதும்டா சாமி உங்​கள் ஆட்​சி’ என்று மக்​கள்​ சொல்​லும்​ நேரம்​ வந்​து​விட்​டது’’ என்​றார்​.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவீதம் அதிகரிப்பு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
2026 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 45% இலக்கை தமிழகம் எட்டும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in