சென்​னை​யில் 2 நாட்களில் போதைப் பொருள் விற்பனை செய்த, கடத்​திய 105 பேர் கைது

சென்​னை​யில் 2 நாட்களில் போதைப் பொருள் விற்பனை செய்த, கடத்​திய 105 பேர் கைது

Published on

சென்னை: சென்​னை​யில் நடை​பெற்ற 2 நாள் சிறப்பு தணிக்​கை​யில் போதைப் பொருள் விற்பனை மற்​றும் கடத்​தலில் ஈடு​பட்ட 105 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்பனையை முற்​றி​லும் தடுக்க போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார், காவல் நிலைய போலீ​ஸாருடன் ஒருங்​கிணைந்​து, 2 நாட்​கள் சிறப்பு தணிக்​கையை மேற்​கொண்​டனர். இந்த தணிக்கை கடந்த 31, 1 ஆகிய தேதி​களில் நடை​பெற்​றது.

அதன்​படி, சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்ட போலீ​ஸாரும் அவர்​கள் எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​களில் போதைப் பொருட்​களுக்கு எதி​ரான கண்​காணிப்பை முடுக்​கி​விட்​டனர்.

இதில் சட்ட விரோத​மாக கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருட்​கள் வைத்​திருந்​தது மற்​றும் விற்பனை செய்​தது தொடர்​பாக 57 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 105 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இதில் 46 கஞ்சா வழக்​கு​கள், 11 மாத்​திரை வழக்​கு​கள் அடங்​கும். கைது செய்​யப்​பட்​ட​வர்​களிட​மிருந்து 26 கிலோ கஞ்​சா, போதைப் பொருளாக பயன்​படுத்த மறைத்து வைத்​திருந்த 1,888 வலி நிவாரண மாத்​திரைகள் மற்​றும் 4 மோட்டார்சைக்கிள்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

போதை மற்​றும் புகை​யிலை பொருட்​களை கடத்தி வருபவர்​கள், பதுக்கி வைப்​பவர்​கள் மற்​றும் விற்பனை செய்​பவர்​களை கைது செய்ய, வாக​னத் தணிக்​கைகள், தீவிர ரோந்து பணி​கள் மற்​றும் சிறப்பு அதிரடி தணிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. இது​போன்ற குற்​றச் செயல்​களில் ஈடு​படு​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்​னை காவல்​ ஆணை​யர்​ அருண் எச்சரித்துள்ளார்.

சென்​னை​யில் 2 நாட்களில் போதைப் பொருள் விற்பனை செய்த, கடத்​திய 105 பேர் கைது
மது போதையில் வந்ததை தட்டிக் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவர் தற்கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in