டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

Updated on
1 min read

சென்னை: மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்வரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. குறிப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை. போக்குவரத்து எங்கும் தடைபடவில்லை. 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 24 குடிசைகள் இடிந்து விழுந்துள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. டிட்வா புயல் சென்னைக்குள் வராமல் சென்னையை ஒட்டியே செல்லும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இன்றும், நாளையும் கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாம். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செல்பி எடுப்பதாக கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம்.

படகு, பயிர் சேதங்களை கணக்கிடும் பணிகள் நவம்பர் 30-க்கு மேல் நடைபெறும். அதற்கு வேண்டிய நஷ்ட ஈடுகளை முதல்வர் உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஒவ்வொரு நகர்வையும் நேரடியாக கவனித்து வருகிறார். புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்வரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். 28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் 10 குழுக்கள் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவழைக்க உள்ளோம். விமானப்படை மற்றும் கடலோர காவல் படைக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாளை பாதிப்பை பொறுத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லா மாவட்டத்திலும் 6000-க்கும் மேற்பட்ட நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் </p></div>
வடதமிழகம், புதுச்சேரியை நோக்கி நகர்கிறது ‘டிட்வா’ புயல்: 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in