“திமுகவினரின் கொள்கைத் தலைவர்கள் இனி...” - அமைச்சர் கீர்த்தனா விமர்சனம்

“திமுகவினரின் கொள்கைத் தலைவர்கள் இனி...” - அமைச்சர் கீர்த்தனா விமர்சனம்
Updated on: 
1 min read

சிவகாசி: “திமுகவினர் பெரியார், அண்ணாவுக்கு பதில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றோரை கொள்கை தலைவர்களாக வைத்துக் கொள்ளலாம். அந்த நிலையில் தான் தந்தையும், மகனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்” என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் பிறந்த 196 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்க மோதிரத்தை அமைச்சர் கீர்த்தனா வழங்கினார். அதன்பின் சிவகாசி அரசு பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயண திட்ட பயணிகள் உடன் கலந்துரையாடிய அமைச்சர், பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்து, மக்களுக்கு பயணச் சீட்டு வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அரசின் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளிலும் தவெகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. வேட்பாளர்களை மக்கள் துரத்துகிறார்கள் என்பது எதிர்க்கட்சியினரால் ஜோடிக்கப்பட்ட நிகழ்வுகளே. முதல்வர்தான் எங்களின் வேட்பாளர்.

பெண்களை தொடர்ந்து இழிவாகப் பேசி வரும் திமுகவினர், பெரியார், அண்ணாவுக்கு பதில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றோரை தங்களது கொள்கை தலைவர்களாக வைத்துக் கொள்ளலாம். அந்த நிலையில்தான் அப்பாவும், மகனும் பேசி வருகிறார்கள்.

தவறுகள் அல்லது குறைகள் இருந்தால் அதை உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மக்களுக்கான அரசாக இந்த அரசு செயல்படுகிறது.

ஆலங்குளம் சிமென்ட் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 மாதங்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.

சரவெடி உற்பத்திக்கு எதிரான தடையை நீக்கியதன் மூலம், இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசுத் தொழில் மிக அமோகமாக நடைபெறும்.

சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை வைத்து தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது. ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்” என்று அவர் கூறினார்.

“திமுகவினரின் கொள்கைத் தலைவர்கள் இனி...” - அமைச்சர் கீர்த்தனா விமர்சனம்
காங்கிரஸ் எம்.பி.யிடம் மெழுகுவர்த்தியை பிடுங்கி வீசிய தவெக எம்எல்ஏ: திருச்சியில் அரசு விழாவில் பரபரப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in