தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
Updated on
1 min read

சென்னை: கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்​டர் எம்ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழக வளாகத்​தில், ரூ.12 கோடி செல​வில் புனரமைக்​கப்​பட்ட கட்​டிடங்​கள், வளாகம் மற்​றும் புதிய நுழைவு வாயில் ஆகிய​வற்றை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று திறந்து வைத்​தார்.

தமிழ்​நாடு டாக்​டர் எம்ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​தர் மருத்​து​வர் நாராயண​சாமி, பதி​வாளர் மருத்​து​வர் சிவசங்​கீ​தா, சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண் தம்​பு​ராஜ், தமிழ்​நாடு சுகா​தார அமைப்பு திட்ட இயக்​குநர் வினீத், பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத் துறை இயக்​குநர் சோமசுந்​தரம், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி இராஜகு​மாரி, மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் சித்ரா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

பின்​னர், அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், ``கடந்த 35 ஆண்​டு​களுக்கு முன்​பு, சென்னை கிண்​டி​யில் தோற்​று​விக்​கப்​பட்ட தமிழ்​நாடு டாக்​டர் எம்ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில், ரூ.12 கோடி செல​வில் நுழைவு வாயில், துணைவேந்​தர் அறை புதுப்​பிப்​பது என்று பல்​வேறு வகை​களில் புனரமைப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. அந்​தப் பணி​கள் முடிவுற்று பயன்​பாட்​டுக்​குக் கொண்டு வரப்​பட்​டுள்​ளன'' என்று தெரி​வித்​தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் ரூ.12 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் 2-வது முறையாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடரும் செவிலியர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in