சிஎம்டிஏ வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

சிஎம்டிஏ வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: சிஎம்டிஏ வளர்ச்​சித் திட்ட பணி​கள் தொடர்​பாக உயர் அதி​காரி​களு​டன் அமைச்​சர் பி.​ராஜ்கு​மார் ஆலோ​சனை நடத்​தி​னார். சென்னை பெருநகர் வளர்ச்​சிக் குழு​மத்​தின் (சிஎம்​டிஏ) சார்​பில் நடை​பெற்று வரும் பல்​வேறு வளர்ச்​சித் திட்​டப் பணி​கள் தொடர்​பாக வீட்டு வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித் துறை அமைச்​சர் ராஜ்கு​மார் உயர் அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

எழும்​பூர் தாள​முத்​து-நட​ராசன் மாளி​கை​யில் உள்ள சிஎம்​டிஏ அலு​வலக கூட்​டரங்​கில் நடந்த கூட்​டத்​தில், துறை செயலர் ஆர்​.கிர்​லோஷ் குமார், சிஎம்​டிஏ

உறுப்​பினர்​-செயலர் ராகுல் நாத், முதன்மை செயல் அலு​வலர் கார்த்​தி​கா, தலை​மைத் திட்ட அமைப்​பாளர்​கள் என்​.ரவிக்​கு​மார், டி.ச​பாப​தி, பெ.கஜேந்​திரன், கண்​காணிப்​புப் பொறி​யாளர்​கள் பால​முரு​கன், ராஜன்​பாபு உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

இதில் சிஎம்​டிஏ முழுமை திட்​டப் பிரி​வின்​கீழ் (Master Plan Unit) உள்ள மூன்​றாம் முழுமை திட்ட தயாரிப்பு பணி​கள், நிலசேகரிப்பு வளர்ச்​சித் திட்​டம் – மாடம்​பாக்​கம், திரு​மழிசை மற்​றும் புது நகர் மேம்​பாடு திட்​டங்​கள் (செங்​கல்​பட்​டு, மீஞ்​சூர், திரு​வள்​ளூர், திரு​மழிசை, மாமல்​லபுரம்).

பரப்பு வளர்ச்சி (Area Development Unit) பிரி​வின் கீழ் உள்ள பல்​வேறு சமுக உட்​கட்​டமைப்பு திட்​டங்​கள் மற்​றும் அவற்​றின் செயல்​பாட்டு நிலைகள், கோயம்​பேடு மொத்த விற்​பனை அங்​காடி, சாத்​தன்​காடு இரும்பு, எக்கு அங்​காடி, வடசென்னை வளர்ச்சி திட்​டத்​தின்​கீழ் நடை​பெற்று வரும் பணி​கள் குறித்​து​ விரி​வாக ஆலோ​சனை செய்​யப்​பட்​டது.

சிஎம்டிஏ வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை
131-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in