பயிர்க்கடன் தள்ளுபடிக்கு கூடுதலாக ரூ.2,758 கோடி விடுவிப்பு: அமைச்சர் காந்திராஜ் தகவல்

பயிர்க்கடன் தள்ளுபடிக்கு கூடுதலாக ரூ.2,758 கோடி விடுவிப்பு: அமைச்சர் காந்திராஜ் தகவல்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு விரிவுபடுத் தப்பட்ட தள்ளுபடி திட்டத்தின் கீழ் கூடுதல் செலவான ரூ.3,039 கோடியில் இதுவரை ரூ.2,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிக ளுக்கும் பாகுபாடின்றி ரூ.75 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தள்ளுபடிக்கான காலவரம்பு 2025 மே 1 முதல் 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கப் படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். பயிர்க் கடன் தள்ளுபடிக்காக ஏற்கெனவே 3 கட்டங்களாக ரூ.2,044 கோடி, ரூ.5,267 கோடி, ரூ.6,024 கோடி என நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்.22-ம் தேதி விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை யைத் தொடர்ந்து, புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜூன் 19-க்கு முன்புகடனை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கும் தகுதி அடிப்படையில் தள்ளுபடி வழங்கப்படும்.

பகுதி தள்ளுபடி பெற்று தவணை தவறிய கடன்களுக்கான வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். மாதம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஓய்வூதியம் பெறுவோரின் தகுதியான கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

ஒரே குடும்பத்தினர் அல்லது விவசாயி பல கடன்கள் பெற்றிருந்தால், அதிகபட்ச தள்ளுபடிக்குத் தகுதியான ஒரு கடனுக்கு மட்டும் சலுகை வழங்கப்படும்.

13.25 லட்சம் விவசாயிகள் பயன்

இந்த திட்டத்தின்கீழ் கடந்த நிதி ஆண்டில் பயிர்க்கடன் பெற்ற 13.25 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.

இதில் 41,342 பேர் புதிதாக பயனடைகின் றனர். 3-ம்கட்டத்தில் விடுவிக்கப்பட்ட ரூ.6,024 கோடியுடன், தற்போதைய கூடுதல் செலவான ரூ.3,039 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.9,063 கோடி அளவுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதில் தற்போதைய கூடுதல் செலவான ரூ.3,039 கோடியில் இதுவரை ரூ.2,758 கோடி அரசால் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

நவ.6-ம் தேதிக்கு முன்பு கடனை செலுத்திய விவசாயிகளுக்கும் தகுதியான தொகை திருப்பி வழங்கப்படும்.

பகுதி தள்ளுபடி பெற்றவர்கள் நவ.30-ம் தேதிக்குள் தவணையைச் செலுத்தினால், அதற்கான வட்டியை அரசே ஏற்கும். தகுதியான விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தின் பயனை முழுமையாகப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடிக்கு கூடுதலாக ரூ.2,758 கோடி விடுவிப்பு: அமைச்சர் காந்திராஜ் தகவல்
சர்க்கரை இருப்பு வைக்கும் காலக்கெடு 30-ல் இருந்து 15 நாட்களாக குறைப்பு

X