

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம்வரை நஷ்டத்தில் இயங்கிய 10 கடைகள்தான் மூடப்படுகின்றன என்று அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் பேசும்போது, ‘‘மேல்மா பகுதியில் சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும்.
கோ–ஆப்டெக்ஸில், 10 விற்பனையகங்கள் மூடப்படுகின்றன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அந்த கடைகள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
3 பகுதிகளில் புதிய கடை இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளித்து பேசும்போது, ‘‘கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், 146 விற்பனையகங்கள் உள்ளன.
இதில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை நஷ்டத்தில்இயங்கிய 10 விற்பனையகங்கள் தற்போது மூடப்படுகின்றன. அவற்றில் 4 மட்டுமே தமிழகத்தில் உள்ளன. அதேநேரம், மக்கள் நடமாட்டமுள்ள 3 பகுதிகளில், புதிதாக கோ–ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன’’ என்றார்.