அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி - முதல்வர் நலம் விசாரிப்பு

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்

Updated on
1 min read

உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தமிழக அரசின் சட்டம் மற்றும் நீர்வளத் துறை அமைச்சராகவும், திமுக பொதுச் செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். 87 வயதாகும் அவருக்கு வயது மூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதியாகி. சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார். இந்நிலையில், நேற்று துரைமுருகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தார்.தொடர்ந்து. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து சென்றார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் துரைமுருகன் | கோப்புப்படம்</p></div>
சென்னை கடற்கரைப் பகுதிகளில் ஜன.14 முதல் 16 வரை 161 டன் திடக் கழிவுகள் அகற்றம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in