திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கண்டனம்

பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் மழையில் நனைந்து கிடந்த நெல் மூட்டைகளை நேற்று பார்வையிட்ட வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வினோத்.

பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் மழையில் நனைந்து கிடந்த நெல் மூட்டைகளை நேற்று பார்வையிட்ட வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வினோத்.

Updated on: 
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் திறந்தவெளி நெல் சேமிப்​புக் கிடங்​கில் மழையில் நெல் மூட்​டைகள் நனைந்து கிடப்​ப​தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேளாண் அமைச்​சர், நெல் மூட்​டைகளைப் பாது​காக்க விரைந்து நட​வடிக்கை எடுக்க அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார்.

கும்​பகோணம் அருகே பட்​டீஸ்வரம் திறந்​தவெளி நெல் சேமிப்​புக் கிடங்​கில் விவசாயிகளிடம் இருந்து கொள்​முதல் செய்​யப்​பட்ட 4.5 லட்​சம் டன் நெல் மூட்​டைகள் அடுக்கி வைக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு நெல் மூட்​டைகள் மழையில் நனைந்து கிடப்​ப​தாகவும், தார்ப்​பாய் கொண்டு நெல் மூட்​டைகளை சேமிப்​புக் கிடங்கு பணி​யாளர்​கள் முறை​யாக மூடி வைக்​க​வில்லை என்​றும் கிடைத்த தகவலின் பேரில் வேளாண் துறை அமைச்​சர் ஆர்.வினோத் நேற்று அங்கு திடீர் ஆய்​வுக்​குச் சென்​றார்.

அப்​போது, சேமிப்​புக் கிடங்​கில் நெல் மூட்டை அடுக்​கு​களில், தார்ப்​பாய்​கள் கிழிந்​தும், நெல் மூட்​டைகள் மழையில் நனைந்​தும், கீழே கொட்​டியும் வீணாகிக் கிடப்​ப​தைக் கண்டு அதிர்ச்சி அடைந்​தார். இதையடுத்து, நுகர்​பொருள் வாணிபக் கழக மண்​டல மேலா​ளர் உள்​ளிட்ட அலு​வலர்​களை செல்​போனில் அழைத்து, “நெல் மூட்​டைகளை பாது​காப்​பாக வைத்​துக் கொள்ள எத்​தனை முறை உங்​களுக்கு அறி​வுறுத்​து​வது?” என கடிந்து கொண்​டார். மேலும், சேமிப்​புக் கிடங்கு பணி​யாளர்​களை அழைத்து, நெல் மூட்​டைகளைப் பாது​காப்​பதை விட உங்​களுக்கு என்ன வேலை? என கேள்வி எழுப்​பினார்.

பின்​னர், அமைச்​சர் ஆர்.வினோத் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் கனமழை பெய்து வரும் நிலை​யில், அனைத்து நெல் சேமிப்​புக் கிடங்​கு​களை​யும் ஆய்வு செய்து, மழையில் நெல் மூட்​டைகள் பாதிக்​கப்​படா​மல் இருக்க நட​வடிக்​கைகளை மேற்​கொண்டு, அறிக்​கையை அளிக்​கவும், தாழ்​வான பகுதி​களில் மழைநீர் தேங்​கி​யுள்ள வயல்​களை ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற நட​வடிக்கை எடுக்​கவும் அலு​வலர்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. அலட்​சி​ய​மாக செயல்​படும் அரசு அலு​வலர்​கள் மீது நட​வடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு தெரி​வித்​தார்.

பணிகள் சிறக்கவே இட​மாறுதல்: அமைச்சர் ஆர்.வினோத் கூறும்போது, ‘‘கடந்த காலங்​களில் சேமிப்​புக் கிடங்​கு​களில் உள்ள நெல்​மணிகளைப் பாது​காக்க எந்த நட​வடிக்​கையும் எடுக்​க​வில்லை. தேக்​கமடைந்​துள்ள நெல்​மணிகளை என்ன செய்​வது என்​ப​தற்​கான தீர்​வு​கள், மழைக் காலம் முடிந்​தவுடன் செயல்​படுத்​தப்​படும். வேளாண்மை துறைகளில் மட்​டும் இல்​லாமல், அனைத்து துறைகளி​லும், மூன்​றாண்​டுகளுக்கு மேல் ஒரு இடத்​தில் பணி​யாற்​றும் அதி​காரி​களை இட​மாறுதல் செய்​யும் பணி நடை​பெற்று வரு​கிறது. இட​மாறுதல் இருந்​தால்​தான் பணிகள் சிறப்​பாக நடை​பெறும்’’ என்​றார்.

<div class="paragraphs"><p>பட்டீஸ்வரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் மழையில் நனைந்து கிடந்த நெல் மூட்டைகளை நேற்று பார்வையிட்ட வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வினோத்.</p></div>
“அரசின் தோல்விகளை மறைக்கவே அன்பில் மகேஸ் கைது” - உதயநிதி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in