உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் கேள்வி

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் கேள்வி
Updated on
1 min read

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறி யிருப்பதாவது: பெரியார் மற்றும் அண்ணாவை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறி திளைக்கும் ‘சன்ஆதன’ சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவரான தங்களுக்கு, அதிகாரத்தை பரவலாக்கும், அனைவரையும் அமரவைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி எப்படி தெரிந்திருக்கும்?.

நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல, முதல்வர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றிபேசுவதற்கு தகுதி கிடையாது.

தமிழகத்தில் 2026 மே 4-ம் தேதி வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் கேள்வி
நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in