கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு | கோப்புப்  படம்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு | கோப்புப்  படம்

Updated on: 
1 min read

சென்னை: “நீண்ட காலமாக சிகிச்சையில் இருக்கும் தவெக எம்எல்ஏவான வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிடச் சொல்கிறோம்” என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, “தமிழகத்தில் ஜனவரி 1 முதல் நேற்று வரை இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 21,655 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். டெங்கு பரவல் தடுப்பில் அரசின் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு முயற்சிகளை பார்வையிட்டேன். சென்னையில் 3,700 பேர் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட காலமாக சிகிச்சையில் இருக்கும் தவெக எம்எல்ஏவான வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிடச் சொல்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்​தூர் தொகுதி தவெக எம்​எல்ஏ வி.எஸ்​.​பாபு. அந்த தொகு​தி​யில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றதன் மூலம் தமிழகம் முழு​வதும் அவர் பிரபலம் அடைந்​தார். ஒரு மாத​மாக நடந்து வந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் பங்​கேற்ற அவருக்​கு, கடந்த மாதம் 9-ம் தேதி இரவு மூச்​சுத்திணறல் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, அவர் சென்னை அமைந்​தகரை நெல்​சன் மாணிக்கம் சாலை​யில் உள்ள எம்​ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டார். தீவிர சிகிச்சை பிரி​வில் அனு​ம​திக்கப்​பட்​டுள்ள அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவி​யுடன் பல்​துறை மருத்​து​வர் குழு​வினர் சிகிச்சை அளித்து வரு​கின்​றனர். கடந்த 23-ம் தேதி முதல்​வர் விஜய் மருத்​து​வ​மனைக்கு சென்று வி.எஸ்​.​பாபுவை சந்​தித்து நலம் விசா​ரித்​தார்.

மேலும், அவருக்கு அளிக்​கப்​படும் சிகிச்​சைகள் குறித்​தும், உடல்நிலை முன்​னேற்​றம் குறித்​தும் மருத்​து​வர்​களிடம் கேட்டறிந்தார். வி.எஸ்​.​பாபு உடல்​நிலை குறித்து சமூக வலைதளங்​களில் அவ்​வப்​போது பல்​வேறு தகவல்​கள் வெளி​யாகி வந்​த​தால், மருத்​து​வ​மனை நிர்​வாகம் அதி​காரப்​பூர்​வ​மாக அவரது உடல்​நிலை அறிக்​கைகளை வெளி​யிட்டு வந்​தது. ஆனால், கடந்த 10 நாட்​களுக்கு மேலாக அறிக்​கைகள் வெளி​யா​காத​தால், மீண்டும் அவரது உடல்​நிலை குறித்து பல்​வேறு தகவல்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வரு​ம் சூழலில், அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.

<div class="paragraphs"><p>கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு | கோப்புப்&nbsp; படம்</p></div>
‘மானூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு’ - சதியா என விசாரிக்க பாமக வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in