600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோக திமுக அரசே காரணம்: அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு

அமைச்சர் அருண்ராஜ்

அமைச்சர் அருண்ராஜ்

Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் 600 எம்​பிபிஎஸ் இடங்​கள் பறி​போக கடந்த திமுக அரசே காரணம் என சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தனலட்​சுமி சீனி​வாசன் மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் சீனி​வாசன் கல்​லூரி ஆகிய இரு கல்வி நிறு​வனங்​களுக்​கும் நிகர்​நிலை பல்​கலைக்​கழக அந்​தஸ்து வழங்​கப்​பட்​டுள்​ளது.

அந்த இரண்டு கல்​லூரி​களும் திமுக எம்​எல்ஏ கதிர​வனுக்கு தொடர்​புடையது. இரண்டு கல்​லூரி​களும் தனி​யார் பல்​கலைக்​கழகம் என்ற வரையறைக்கு கீழ் வரு​வ​தால், இந்த வாய்ப்பை பயன்​படுத்​தி, அவர்​கள் தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​திடம் இருந்து தடை​யில்லா சான்று பெறாமலேயே நேரடி​யாக பல்​கலைக்​கழக மானிய குழு​வுக்கு விண்​ணப்​பித்து நிகர்​நிலை பல்​கலைக்​கழக அந்​தஸ்து பெற்​றுள்​ளனர். இதனால், எம்​பிபிஎஸ் படிப்​பில் மாநில அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள் பாதிக்​கப்​படும்.

அரசு பள்ளி மாணவர்​களுக்​கான இடங்​கள் பறி​போகும்; கல்விக் கட்​ட​ணம் பல லட்​ச​மாக உயரும் என்​பதை அறிந்தே அந்த கல்​லூரி​யின் நிர்​வாகி​கள் இத்​தகைய செயலை செய்​துள்​ளனர். இது​தான் அவர்​கள் மக்​களுக்கு வழங்​கும் நியாய​மா?

எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தின் கீழ் செயல்​படும் உறுப்பு கல்​லூரி​கள் நிகர்​நிலை பல்​கலைக்​கழகத்​தின் அந்​தஸ்து பெற விரும்​பி​னால், சம்​பந்​தப்​பட்ட பல்​கலைக்​கழகத்​திடம் தடை​யில்லா சான்று கோரி விண்​ணப்​பிக்க வேண்​டும். அதன் பேரில் 60 நாட்​களுக்​குள் பல்​கலைக்​கழகம் முடிவு எடுக்​கா​விடில் தடை​யில்லா சான்று அளிக்​கப்​பட்​ட​தாக கருதப்​படும்.

அந்த வகை​யில், ஓசூரில் உள்ள செயின்ட் பீட்​டர்ஸ் மருத்​துவ கல்​லூரி கடந்த ஆட்​சி​யில் தடை​யில்லா சான்று கோரி விண்​ணப்​பித்​தது. அதனை நிராகரிப்​ப​தாக 60-வது நாளில் முடி​வெடுத்​து, அதுகுறித்த விவரத்தை 67-வது நாளில்​தான் பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது. இதனால் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்து சம்​பந்​தப்​பட்ட கல்​லூரி​யானது தற்​போது நிகர்​நிலை அந்​தஸ்து பெற்​று​விட்​டது. இதே​போன்று கற்பக விநாயகா மருத்​துவ கல்​லூரிக்கு முதல் 60 நாளில் எந்த முடி​வும் எடுக்​காமல், 90-வது நாளில் தடை​யில்லா சான்றை பல்​கலைக்​கழகம் வழங்​கி​யிருக்​கிறது. அடுத்த இரு மாதங்​களுக்கு பிறகு அதை ரத்து செய்​துள்​ளது. இதுகுறித்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், உரிய காலக்​கெடு​வுக்​குள் மேற்​கொள்​ளப்​ப​டாத பல்​கலைக்​கழகத்​தின் எந்த செயலை​யும் ஏற்​க​வில்​லை. இதனால் அந்த கல்​லூரிக்​கும் நிகர்​நிலை அந்​தஸ்து கிடைத்​துள்​ளது.

இத்​தகைய மக்​கள் நலனற்ற செயல்​கள் காரண​மாகவே தற்​போது எம்​பிபிஎஸ் இடங்​கள் குறையக்​கூடிய நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதற்கு கடந்த திமுக அரசே காரணம் கல்வி மற்​றும் மருத்​து​வம் ஆகிய இரண்​டுமே மாநில பட்​டியலில் இருக்க வேண்​டும் என்​பது​தான் முதல்​வரின் விருப்​பம். அதனை உறுதி செய்​யவே அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது. அந்த வகை​யில் நிகர்​நிலை பல்​கலைக்​கழக விவ​காரத்​தில் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்ய இருக்​கிறோம். தடை​யில்லா சான்​றுக்கு 60 நாள் அவகாசம் அளிப்​பது உள்​ளிட்ட விதி​களில் திருத்​தம் செய்​ய​ ஆலோ​சித்து வருகிறோம். வரும் காலங்​களில் மாநில அரசிடம் தடை​யில்லா சான்று பெறாமலும், அனு​மதி பெறாமலும் எந்த கல்​லூரிக்​கும் நிகர்​நிலை பல்​கலைக்​கழக அந்​தஸ்து வழங்​கக்​கூ​டாது என மத்​திய கல்வி அமைச்​சரிடம் கோரிக்​கை வைக்​க இருக்​கிறோம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் அருண்ராஜ்</p></div>
மின் தடைக்கு தீர்வு காண புதிய திட்டம்: அதிகாரிகளுக்கு மின் வாரிய தலைவர் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in