திருச்சியில் அமித் ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு: காரைக்கால் புறப்பட்டார்!

திருச்சியில் அமித் ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு: காரைக்கால் புறப்பட்டார்!

படம்: ர. செல்வமுத்துகுமார்

Updated on
1 min read

காரைக்கால்: தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு 11.31 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார். இன்று (பிப்.14) காலை 11 மணியளவில் நட்சத்திர விடுதியில் இருந்து கிளம்பிய அவருக்கு, மேளதாளங்கள் முழங்க வழிநெடுக பாஜகவினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு 11.15 மணிக்கு சென்றடைந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டார்.

காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் அவர், கார் மூலம் காரைக்கால் நகராட்சித் திடலுக்கு 12 மணியளவில் சென்று, அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும், ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 5.25 மணிக்கு மீண்டும் திருச்சிக்கு திரும்பும் அவர், எல்லைக்காவல் படைக்கு சொந்தமான விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

திருச்சியில் அமித் ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு: காரைக்கால் புறப்பட்டார்!
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,280 உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in