தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,280 உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை!

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,280 உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை!
Updated on
1 min read

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.14) பவுனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது. 2 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ( பிப்ரவரி 14) தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,560-க்கும், பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,16,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,450-க்கும்,பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,280 உயர்வு; வெள்ளி மாற்றமின்றி விற்பனை!
சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி இழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in