“தமிழகம் முழுவதும் ரயில்வே மேம்பால திட்டங்களுக்கு முக்கியத்துவம்” - பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழுவதும் ரயில்வே மேம்பால திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்எல்ஏ ரகுபதி பேசும்போது, "புதுக்கோட்டை நகரத்துக்கு மூன்று ரயில்வே கேட்டுகள் நுழைவாயிலாக உள்ளன. மூன்றிலும் ரயில்வே மேம்பாலங்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் இந்த மூன்று ரயில்வே கேட்டுக்களிலும் மேம்பாலம் கட்ட அரசு முன்வருமா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “புதுக்கோட்டை மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் நிறைய இடத்தில் இல்லை என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நம்முடைய பட்ஜெட்டில், அதிக போக்குவரத்து உள்ள இடங்களுக்கு முதல் முன்னுரிமை என வகை பிரித்து வைத்திருக்கிறோம். ரயில்வே சந்திக் கடவுகளில் (Railway Junctions) ஒன்றரை மணி நேரம் நிற்க வேண்டியுள்ளது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்த பிரச்சினை உள்ளது. அது எனது கவனத்துக்கும் வந்துள்ளது முதல் கட்டமாக ரயில்வே மேம்பாலங்களை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிவட்ட சாலை பிரச்சினை இருக்கிறது. 234 தொகுதிகளில் 173 எம்எல்ஏக்கள் ரயில்வே மேம்பாலம், வெளிவட்ட சாலை அமைக்க கோரியுள்ளனர். அதற்கான ஆய்வுகளையும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அதற்காக அதிமுக ஆட்சியில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசு அனுப்பப்பட்டு மத்திய அரசு அந்த திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டத்தை அரசு முன்வருமா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நமது மானிய கோரிக்கையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 8 வழி சாலையாக மாற்றுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகள் உடனடியாக தொடங்க இருக்கிறோம்.

மத்திய அமைச்சரை சந்தித்தபோது இது தொடர்பாக ஒரு மணி நேரம் விவாதித்தோம். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை அதிகமான போக்குவரத்து உள்ளது. 8 வழி சாலையாக கொண்டுவந்தால் தான் அடுத்த 30 ஆண்டு போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

குறிப்பாக, இந்த சாலையில் தான் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. திருச்சியிலிருந்து இருந்து சென்னை நோக்கி வரும்போது 4 மணி நேரத்தில் செங்கல்பட்டு வந்துவிடுகிறோம். அங்கிருந்து விமான நிலையத்துக்கு வர 3 மணி நேரம் ஆகிறது.

இதேபோல் பெங்களூரில் இருந்து திருவள்ளூருக்கு எளிதில் வந்து விடலாம். ஆனால் பூந்தமல்லி சாலையில் இருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிவிடுகிறது.

சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவது சிரமமாக இருக்கிறது. அடுத்த மாதம் மத்திய அமைச்சருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நிச்சயம் தாம்பரம் - செங்கல்பட்டு உயர்மட்ட சாலை குறித்து பேசி, செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p></div>
“சுஸ்லான் நிறுவனம் ஆந்திராவுக்கு செல்லவில்லை” - பேரவையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in