வில்லிவாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு: சீதனம் வழங்கினார் அமைச்சர் ஆதவ் அர்​ஜுனா

வில்லிவாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு: சீதனம் வழங்கினார் அமைச்சர் ஆதவ் அர்​ஜுனா
Updated on: 
1 min read

சென்னை: வில்​லிவாக்​கத்​தில் 100-க்​கும் மேற்​பட்ட கர்ப்​பிணி பெண்​களுக்கு நடை​பெற்ற வளைகாப்பு விழா​வில் பங்​கேற்ற அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கர்ப்​பி​ணிகளுக்கு சீதனப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரி​வித்​தார்.

சமூக நலன் மற்​றும் மகளிர் உரிமைத் துறை சார்​பில் ஒருங்​கிணைந்த குழந்​தைகள் வளர்ச்சி பணிகள் திட்​டத்​தின் கீழ் வில்லிவாக்​கம் சட்​டப்​பேரவை தொகுதிக்​குட்​பட்ட கர்ப்​பிணி தாய்மார்​களுக்கு சமூக வளைகாப்பு விழா வில்​லிவாக்​கம், சிட்கோ நகர் சமுதாய நலக் கூட அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. விளையாட்டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா விழாவுக்கு தலைமை தாங்கி 100-க்​கும் மேற்​பட்ட கர்ப்​பிணி தாய்​மார்களுக்கு வளை​யல் அணி​வித்து, நலங்கு வைத்து வாழ்த்​தினார்.

தொடர்ந்து ஒவ்​வொரு கர்ப்​பி​ணிப் பெண்​களுக்​கும் பட்டுப்புடவை, வளை​யல், பழங்​கள், இனிப்​பு​கள், மாலை மற்​றும் முதல்வர் சார்​பாகவும், தன் சார்​பாகவும் பரிசாக குழந்தைகளுக்கான முதல் தொட்​டில் உள்​ளிட்ட வளைகாப்​புச் சீதனப் பொருட்​களை அமைச்​சர் வழங்​கினார். நிறைவாக, விழாவில் கலந்​து​கொண்ட அனைவருக்​கும் சாம்​பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்​ளிட்ட 5 வகை​யான அறுசுவை கலவை சாதங்​களு​டன் விருந்து பரிமாறப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா பேசிய​தாவது: ஒரு தாய் நினைத்​தால் நாட்​டையே ஆளக்​கூடிய நல்ல தலை​வர்​களை​யும், ஏன் முதல்​வர்​களை​யும் கூட உரு​வாக்க முடியும். எனவே, ஆணையும் பெண்​ணை​யும் சமமாக நடத்த தாய்​மார்​கள் கற்றுக்கொடுக்க வேண்​டும். தனித்​திறமையை அடை​யாளம் கண்டு விளை​யாட்டு உள்​ளிட்ட துறைகளில் அவர்​களை ஈடுபடுத்தி சாதனைகளை நிகழ்த்த உதவ வேண்​டும். இவ்​வாறு அவர் பேசினார்.

விழா​வின் ஒரு பகுதி​யாக கரு உரு​வான நாள் முதல் 2 வயது வரையி​லான குழந்​தைகளின் வளர்ச்​சிக் காலமான, முதல் 1000 நாட்​களின் முக்​கியத்​து​வம் குறித்​தும், கர்ப்​பி​ணிகள் பின்​பற்​ற​வேண்​டிய ஊட்​டச்​சத்து மற்​றும் சுகாதார முறைகள் குறித்த தகவல்​கள் அடங்​கிய கண்​காட்​சி​யும், மாநக​ராட்சி சார்​பில் கர்ப்​பி​ணிகளுக்கு மருத்​து​வப் பரிசோதனை முகாமும் நடத்​தப்​பட்​டன. இந்​நிகழ்​வில் சென்னை மாவட்ட ஆட்சி​யர் எஸ்.மாலதி ஹெலன், மாநக​ராட்சி மத்​திய வட்​டார துணை ஆணை​யர் எச்.ஆர்.கவுஷிக், தென்​சென்னை மாவட்ட திட்ட அலு​வலர் இரா.ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பங்​கேற்றனர்.

வில்லிவாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு: சீதனம் வழங்கினார் அமைச்சர் ஆதவ் அர்​ஜுனா
‘பிரேக் இல்லாத வாகனம் போல் தமிழக அரசு’- பழனிசாமி குற்றச்சாட்டு

X