முன்னாள் விளையாட்டு வீரர்கள் 13 பேருக்கு ஓய்வூதிய ஆணை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

முன்னாள் விளையாட்டு வீரர்கள் 13 பேருக்கு ஓய்வூதிய ஆணை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் மூலம், பொருளா​தா​ரத்​தில் நலிந்த நிலை​யில் உள்ள விளை​யாட்டு வீரர்​களுக்​கான ஓய்​வூ​தி​யத் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

இத்​திட்​டத்​தின்​கீழ், விளை​யாட்​டுத் துறைக்கு ஆற்​றிய சிறப்​பான பங்​களிப்பை அங்​கீகரிக்​கும் வகை​யிலும், ஓய்​வுக்கு பிறகு அவர்​களது வாழ்​வா​தா​ரத்தை உறு​தி​செய்​யும் வித​மாக​வும், 58 வயதை எட்​டிய நலிந்த நிலை​யில் உள்ள முன்​னாள் விளை​யாட்டு வீரர்​களுக்கு மாதம்​தோறும் ரூ.6 ஆயிரம் ஓய்​வூ​தி​ய​மாக வழங்​கப்​படு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, பொருளா​தா​ரத்​தில் நலிந்த நிலை​யில் உள்ள 13 முன்​னாள் விளையாட்டு வீரர்​களுக்கு ஓய்​வூ​திய ஆணை​களை​யும், 3 பேருக்கு குடும்ப ஓய்​வூ​திய ஆணை​களை​யும், அதற்​கான நிலு​வைத் தொகை​யாக ரூ.14.13 லட்​சத்துக்​கான காசோலைகளை​யும் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா நேற்று வழங்​கி​னார்.

இத்​திட்​டத்​தின்​கீழ் 82 நலிந்த நிலை​யில் உள்ள முன்​னாள் விளை​யாட்டு வீரர்​கள், 13 குடும்ப ஓய்​வூ​தி​யர்​கள் ஓய்​வூ​தி​யம் பெற்று பயனடைந்து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது. ஓய்​வூ​திய ஆணை​களு​டன் சேர்த்​து, 4 பெண்​கள், 2 ஆண்​கள் என மொத்​தம் 6 பயிற்​றுநர்​களுக்கு பணி நியமன ஆணை​களை​யும் அமைச்​சர் வழங்​கி​னார்.

இந்த நிகழ்​வில் விளை​யாட்​டுத் துறை செயலர் சந்​தீப் நந்​தூரி, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி,மாவட்ட வரு​வாய் அலு​வலர் ரெ.சுமன், பொது மேலா​ளர் ல.சுஜாதா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

முன்னாள் விளையாட்டு வீரர்கள் 13 பேருக்கு ஓய்வூதிய ஆணை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
தொழில்நுட்பக் கோளாறால் பூங்கா நிலையத்தில் பழுதாகி நின்றது ரயில்: தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in