முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: ​முதல்​வர் கோப்பை விளை​யாட்​டுப் போட்​டிகளை தொடங்கி வைத்த அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, நடப்​பாண்டு விளை​யாட்​டுப் போட்​டிகளில் 26.38 லட்​சம் வீரர்​கள் பதிவு செய்து சாதனை படைத்​துள்​ள​தாக தெரி​வித்​தார்.

தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் சார்​பில் ஆண்​டு​தோறும் நடத்​தப்​படும் முதல்​வர் கோப்​பைக்​கான மாவட்ட மற்​றும் மண்டல அளவி​லான விளை​யாட்​டுப் போட்​டிகளை விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா சென்னை ஜவஹர்​லால் நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் நேற்று தொடங்கி வைத்​தார்.

விழா​வில் முதல்​வர் கோப்பை போட்​டிக்​கான அதி​காரப்​பூர்வ சின்​னம், கொடி மற்​றும் ஜெர்​சியை அறி​முகப்​படுத்​திய அமைச்​சர், மகளிர் கால்​பந்து போட்​டிக்​கான டாஸை போட்டு ஆட்​டத்தை தொடங்கி வைத்​தார். தமிழகம் முழு​வதும் உள்ள 38 மாவட்​டங்​களி​லும் பள்​ளி, கல்​லூரி, பொது​மக்​கள், அரசு ஊழியர்​கள் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் ஆகிய 5 பிரிவு​களின் கீழ் அக். 4-ம் தேதி வரை ​போட்​டிகள் நடை​பெற உள்​ளன.

நிகழ்ச்​சி​யில் பேசிய அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, “கடந்த ஆண்டு முதல்​வர் கோப்பை விளை​யாட்டுப் போட்​டிகளில் 16.28 லட்​சம் பேர் பங்​கேற்ற நிலை​யில், நடப்​பாண்டு இணை​யதளம் வாயி​லாக இது​வரை இல்​லாத சாதனை​யாக 26.38 லட்​சம் வீரர், வீராங்​க​னை​கள் பதிவு செய்​துள்​ளனர்.

இதில் 14.86 லட்​சம் பள்ளி மாணவர்​கள், 5.35 லட்​சம் கல்​லூரி மாணவர்​கள், 5.07 லட்​சம் பொது​மக்​கள், 69 ஆயிரம் அரசு ஊழியர்​கள் மற்​றும் 38 ஆயிரம் மாற்​றுத் திற​னாளி​கள் அடங்​கு​வர். அதி​கபட்​ச​மாக திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் 1.74 லட்​சம் பேரும், சென்​னை​யில் 99 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோரும் பதிவு செய்​துள்​ளனர்.

அதே​போல் ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பங்​கேற்​கும் விளை​யாட்டு வீரர்​களுக்​கு, விளை​யாட்​டு​களில் பங்கு கொள்​வதற்கு சிறப்பு நிதி உதவி​யாக ரூ.7 லட்​சம் வழங்​கப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி ஜப்​பானில் நடை​பெறவுள்ள ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் தமிழகத்​திலிருந்து பங்​கேற்​கும் 36 வீரர், வீராங்​க​னை​களுக்கு தலா ரூ.7 லட்​சம் வீதம் மொத்​தம் ரூ.2.52 கோடி நிதி உதவி இன்​றைக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன.

மாணவர்​கள் கல்விக்கு அளிக்​கும் அதே முக்​கி​யத்​து​வத்தை விளை​யாட்​டுக்​கும் அளித்து சர்​வ​தேச அரங்​கில் பெருமை சேர்க்க வேண்​டும். அவர்​களுக்கு அரசு அனைத்து உதவி​களை​யும் வழங்​கும்” என்று தெரி​வித்​தார்.

விழா​வில் விளை​யாட்​டுத் துறை செயலர் சந்​தீப் நந்​தூரி, மாவட்ட வரு​வாய் அலு​வலர் ரெ.சுமன், பொது​மேலா​ளர் ல.சுஜா​தா உள்​ளிட்​ட அரசு உயர்​ அதி​காரி​கள்​ கலந்​து​ கொண்​டனர்​.

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்
முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து செப்.12-ல் திமுக ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in