முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து செப்.12-ல் திமுக ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து செப்.12-ல் திமுக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: ​முதல்வர் விஜய்​யின் சட்​டப்​பேரவை பேச்​சைக் கண்​டித்து செப்​.12-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என்று திமுக அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக திமுக தலை​மைக் கழகம் வெளி​யிட்ட அறிக்​கை​: திரை​யுலக கவர்ச்சி மூல​மாக மக்​களை மயக்​கி, போலி​யான பிம்​பத்தை சமூக ஊடகங்களின் மூல​மாகக் கட்​டமைத்​து, குழந்​தைகளை ஏமாற்றி குடும்​பத்​துக்​குள் குழப்​பங்​களை ஏற்​படுத்​தி, போலி வாக்​குறு​தி​கள் அளித்து ஆட்​சியை தவெக கைப்​பற்​றியது.

திமுக கூட்​ட​ணி​யில் வென்​றவர்​களுக்கு அமைச்​சர்​கள் பொறுப்​பு​களை கொடுத்து அவர்​களது ஆதர​வைப் பெற்​று, அதி​முக சார்​பில் வென்​றவர்​களுக்​கும் அமைச்​சர் பதவி தரு​வ​தாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்​தி, முதல்​வ​ராகி இருக்​கி​றார் நடிகர் விஜய்.

மக்​களுக்கு கொடுத்த வாக்​கு று​தி​களை நிறை​வேற்​ற​வில்​லை. மாநிலத்​தில் கொலை-​கொள்​ளை, போதைப் பொருள் நடமாட்​டம் - பாலியல் வன்​முறைகள் அதி​க​மாகி விட்​டன.

பல்​வேறு குற்​றச்​செயல்​களில் தவெக நிர்​வாகி​களே சிக்கி வரு​கி​றார்​கள். ‘தெரி​யாமல் ஓட்​டுப் போட்​டு​விட்​டோம்’ என்று மக்​கள் வருந்​திச் சொல்லி வரு​கி​றார்கள்.

இதிலிருந்து திசை திருப்​பு வதற்​காக ‘டயலாக் சூட்​டிங்’ மேடை​யாக சட்​டப்​பேர​வையை முதல்​வர் மாற்​றி​விட்​டார். கருணாநி​தி, முரசொலி மாறன், மு.க.ஸ்​டா​லின் ஆகி​யோரை கொச்​சைப்​படுத்தி சட்​டப்​பேர​வை​யில் விஜய் பேசிய பேச்​சுகள் கண்​டிக்​கத்​தக்​கது. இதன்​மூல​மாக சட்​டப்​பேர​வை​யின் மாண்​பு, மரபு, வரலாறு இவை அனைத்​தும் காற்​றில் பறக்​கின்றன.

ஆட்​சி​யின் தோல்வி​களுக்​குப் பதில் சொல்ல முடி​யாமல் தப்​பித்​துக் கொள்ள, கொச்​சை​யான பேச்​சுகளைப் பேசும் தரமற்ற மனித​ராக முதல்​வர் விஜய் மாறி​யிருக்​கி​றார்.

இவரது பேச்​சைக் கண்​டிக்​கும் வகை​யில், திமுக சார்​பில் வரு​வாய் மாவட்​டத் தலைநகரங்​களில் செப்​.12-ம் தேதி, மாவட்​டச் செய​லா​ளர்​கள் தலை​மை​யில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். இதில் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். இவ்​வாறு அதில்​ கூறப்பட் டுள்ளது.

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து செப்.12-ல் திமுக ஆர்ப்பாட்டம்
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 31,510 பேருக்கு 2017-23 காலகட்டத்தில் தாமதமாக கல்வி உதவித்தொகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in