மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு
Updated on
1 min read

மேட்​டூர்​/தரு​மபுரி: காவிரி டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணை​யில் இருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடி​யில் இருந்து தற்போது 10,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டு உள்​ளது.

மேட்​டூர் அணை​யில் இருந்து டெல்டா மாவட்​டங்​களின் பாசனத் தேவைக்​காக கடந்த 1-ம் தேதி முதல்வர் விஜய் தண்​ணீரை திறந்து வைத்தார். நீர் திறப்பை படிப்படியாக அதிகரித்து இதுவரை விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வந்தது.

இந்நிலை​யில், டெல்டா பாசனத்துக்​கான தண்ணீர் தேவை அதி​கரித்​ததால் கூடுதலாக நீர் திறக்குமாறு விவசாயிகள் கோரி வந்தனர். இதனிடையே நேற்று மாலை முதல் நீர்​திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டது.

அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 8,612 கனஅடி​யாக இருந்த நிலை​யில், மாலை​யில் 9,709 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணை​யின் நீர்​மட்​டம் 92.39 அடி​யாக​வும், நீர் இருப்பு 55.42 டிஎம்​சி​யாக​வும் இருந்​துவருகிறது. இதனிடையே, தரு​மபுரி மாவட்​டம் ஒகனேக்​கல் காவிரியில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 8,500 கனஅடி​யாக பதி​வான நீர்​வரத்​து, நேற்​றும் மாற்​றமின்றி 8,500 கனஅடி​யாகவே தொடர்ந்​தது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு
"ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in