

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள திறந்தவெளி அகழ் வைப்பகத்தை நேற்று பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்.
திருப்புவனம்: கீழடி திறந்தவெளி அகழ் வைப்பகத்தை முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா பார்வையிட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ரூ.24.30 கோடியில் 5,917 சதுர மீட்டரில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கீழடி திறந்தவெளி அகழ் வைப்பகத்தை திறந்து வைத்தார். அதை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
உள்ளரங்கு வைப்பகம்... இந்நிலையில், கீழடி திறந்தவெளி அகழ் வைப்பகத்தைப் பார்வையிடுவதற்காக நேற்று மாலை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்தார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் ஜெபிகிரேஸியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, திறந்தவெளி அகழ் வைப்பகத்தைப் பார்வையிட்ட துர்கா ஸ்டாலின், அருகேயுள்ள உள்ளரங்கு அகழ் வைப்பகத்தையும் பார்வையிட்டார். கீழடி அகழாய்வுத் தள இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய் ஆகியோர் அகழ் வைப்பகம் குறித்து அவருக்கு விளக்கினர்.
பின்னர், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி சென்று, கற்பக விநாயகர் கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார்.