

மேட்டூர் அணை.
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நீர்மட்டம் 94.66 அடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 116 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 35 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 95.17 அடியிலிருந்து 94.66 அடியாகவும், நீர் இருப்பு 58.76 டிஎம்சியிலிருந்து 58.14 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த22-ம் தேதி காலை விநாடிக்கு 4,000 கனஅடியாக பதிவான நீர்வரத்து, 23-ம் தேதி காலை 1,500 கனஅடியாக குறைந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக மேலும் குறைந்தது.