திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் 1,300 படிக்கட்டுகளில் யோகா செய்தபடி மலையேறிய சிறுமி

திருச்​செங்​கோடு அர்த்த​நாரீஸ்வரர் மலைக்​கோ​யில்  படிக்​கட்​டில் யோகாசனம் செய்​த​படி சென்​ற சிறுமி ஹ​னா.

திருச்​செங்​கோடு அர்த்த​நாரீஸ்வரர் மலைக்​கோ​யில்  படிக்​கட்​டில் யோகாசனம் செய்​த​படி சென்​ற சிறுமி ஹ​னா.

Updated on
1 min read

நாமக்கல்: ​​திருச்​செங்​கோடு அர்த்​த​நாரீஸ்​வரர் மலைக்​கோயி​லில் 1,300 படிக்​கட்​டு​களில் யோகாசனம் செய்​த​படி மலை​யேறிச் சென்ற சிறுமிக்​குப் பாராட்​டு​கள் தெரிவிக்​கப்​பட்​டது.

சேலம் செவ்​வாய்​பேட்​டையைச் சேர்ந்த ஜூபேர் அகமது-அ​தியா பானு தம்​ப​தி​யின் மகள் ஜி.ஹ​னா. இவர் சேலத்​தில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 3-ம் வகுப்பு படித்து வரு​கிறார். மேலும், யோகாசன​மும் பயின்று வரு​கிறார்.

இந்​நிலை​யில், இச்​சிறுமி திருச்​செங்​கோடு மலை அடி​வாரத்​தில் உள்ள ஆறு​முக​சாமி கோயி​லில் இருந்து நேற்று மலை உச்​சி​யில் உள்ள அர்த்​த​நாரீஸ்​வரர் கோயிலுக்கு செல்​லும் 1,300 படிக்​கட்​டு​களி​லும் யோகாசனம் செய்​த​படி மலை​யேறி​னார்.

ஒவ்​வொரு படிக்​கட்​டிலும் வெவ்​வேறு வகை​யான யோகாசனங்​களை செய்​த​படி மலை​யேறிச் சென்​றார். காலை 6.45 மணிக்கு தொடங்கி காலை 10.30 மணிக்கு மலைக் கோயிலை அடைந்​தார். இதுகுறித்து சிறுமி ஹனா கூறும்​போது, “கடந்த சில ஆண்​டு​களாக நான் யோகாசனம் பயின்று வரு​கிறேன். இதில் ஏதாவது சாதிக்க வேண்​டும் என நினைத்​தேன்.

அதன்​படி, 1,300 படிக்​கட்​டு​களி​லும் யோகாசனம் செய்​த​படி மலை ஏறினேன். மலை​யேறும்​போது விருச்​சக ச​னா, கரு​டாச​னா, பூரண தனு​ராச​னா, சக்​க​ராச​னா, நின்ற பாத ஆசனா, வீராசனம், அர்த்த கோண ஆசனா, அர்​த்​த சல​பாசனம்​ என பல்​வேறு ஆசனங்​களை செய்​தேன்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>திருச்​செங்​கோடு அர்த்த​நாரீஸ்வரர் மலைக்​கோ​யில்&nbsp; படிக்​கட்​டில் யோகாசனம் செய்​த​படி சென்​ற சிறுமி ஹ​னா.</p></div>
“தமிழகத்தில் நாங்களே மீண்டும் வெல்வோம்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in