மேட்டூருக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,538 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை | கோப்புப் படம்

மேட்டூர் அணை | கோப்புப் படம்

Updated on
1 min read

மேட்டூர்/தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 13,538 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது.

கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறந்து விடப்​பட்​டுள்ள நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து ஏற்ற இறக்​கத்​தில் உள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 11,308 கனஅடி தண்​ணீர் வந்து கொண்​டிருந்​தது. மாலை​ 12,324 கனஅடி​யாக​வும், நேற்று காலை 12,883 கனஅடி​யாக​வும் நீர்​வரத்து உயர்ந்​தது.

தொடர்ந்து மாலையில் மேலும் அதி​கரித்து விநாடிக்கு 13,538 கனஅடி​யானது. அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்​ணீர் திறக்கப்​பட்டு வரு​கிறது. வரும் நீரின் அளவைவிட வெளியேற்​றப்​படும் நீரின் அளவு குறை​வாக இருப்​ப​தால், நீர்​மட்​டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்​போதைய நில​வரப்​படி நீர்​மட்​டம் 86.83 அடி​யாக​வும், நீர்​இருப்பு 49.09 டி.எம்​.சி.யாக​வும் உள்​ளது. இதனிடையே, தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 12,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று 13,000 கனஅடி​யானது.

<div class="paragraphs"><p>மேட்டூர் அணை | கோப்புப் படம்</p></div>
“தவெக அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான்”: உதயநிதி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in