மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,148 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,148 கனஅடியாக சரிவு
Updated on
1 min read

மேட்டூர்/ தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 6,148 கனஅடி​யாக சரிந்​தது.

கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி ஆற்​றில் தொடர்ந்து தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரும் நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 8,993 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று மாலை 6,148 கனஅடி​யாகக் குறைந்​தது.

அணையி​லிருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி நீரும் குடிநீருக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்​ணீரும் திறந்​து​ விடப்​படு​கிறது. அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவை​விட நீர்​வரத்து குறை​வாக இருப்​ப​தால், நீர்​மட்​டம் சரிந்து வரு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் 91.92 அடி​யாக​வும், நீர்இருப்பு 54.87 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

இதனிடையே ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை 9,000 கனஅடி​யாக நீர்வரத்து இருந்தது. இந்​நிலை​யில், நேற்று காலை 6 மணி​யள​வில் விநாடிக்கு 7,500 கனஅடி​யாக நீர்​வரத்து குறைந்​தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,148 கனஅடியாக சரிவு
அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதிக்குப் பதில் ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டம் செப்.25-ல் தொடக்கம்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in