செட்டிநாடு குமார ராணி மீனா முத்தையா காலமானார்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

குமார ராணி மீனா முத்தையா

குமார ராணி மீனா முத்தையா

Updated on
2 min read

சென்னை: செட்​டி​நாடு அரசர் ராஜா சர் அண்​ணா​மலை செட்​டி​யாரின் பேத்​தி​யும், குமார ராஜா முத்​தையா செட்​டி​யாரின் மனை​வி​யு​மான குமார​ ராணி மீனா முத்தையா ஊட்​டி​யில் கால​மா​னார். அவருக்கு வயது 93.

குமார ராணி மீனா முத்​தையா வயது முதிர்வு காரண​மாக கடந்த 25 நாட்​களுக்​கும் மேலாக ஊட்​டி​யில் உள்ள தனது குடும்​பத்​தின் மூதாதையர் இல்​லத்​தில் தங்கி இருந்து சிகிச்சை பெற்​று​வந்​தார். இந்​நிலை​யில், வெள்​ளிக்​கிழமை இரவு தூங்​கச் சென்​றவர் நேற்று காலை வழக்​க​மான நேரத்​துக்கு எழவில்லை என்று தெரி​கிறது.

இதையடுத்து பங்​களா​வில் இருந்த பணி​யாளர்​கள் குமார ராணி​யின் அறைக்​குள் சென்று பார்த்​த​போது அவர் அசை​வின்றி இருந்​திருக்​கிறார். உடனடி​யாக அவர் ஊட்​டி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ஏற்​கெனவே அவர் இறந்​து​விட்​டதை உறுதி செய்​தனர்.

இதையடுத்து குமார ராணி மீனா முத்​தை​யா​வின் உடல் நேற்று மாலை கோவை​யில் இருந்து விமானத்​தி்ல் சென்னை கொண்​டு​வரப்​பட்​டு, ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள செட்​டி​நாடு மாளி​கை​யில் உறவினர்​கள், நண்​பர்​கள் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது. அவரது உடலுக்கு ஏராள​மானோர் மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தினர்.

இன்று காலை 10 மணி அளவில் செட்​டி​நாடு மாளி​கை​யில் இருந்து குமார ராணி மீனா முத்​தை​யா​வின் இறுதி ஊர்​வலம் புறப்​பட்​டு, மயி​லாப்​பூர் மயானத்தில் இறு​திச் சடங்​கு​ கள் நடத்​தப்​படு​கின்​றன.

கல்விச் சேவை: மறைந்த குமார ராணி மீனா முத்​தை​யா​வின் கணவர் குமார ​ராஜா எம்​.ஏ.எம்​.​முத்​தையா செட்​டி​யார் 1970-ல் காலமானார். இதையடுத்து குமார ராணி மீனா முத்​தையா தன்னை பொதுச் சேவை​யில் ஈடு​படுத்​திக் கொண்​டார். 1986-ல் சென்னை அடை​யாறில் செட்​டி​நாடு வித்​யாஷ்ரமம் பள்​ளியை நிறு​வி​னார். பின்​னர், குமார​ராணி மீனா முத்​தையா கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி உள்​ளிட்ட கல்வி நிறு​வனங்​களை​யும் தொடங்கி வெற்​றிகர​மாக வழிநடத்​தி​னார்.

தமிழக அரசு விருது: குமார ராஜா முத்​தையா கலை மற்​றும் கைவினை பள்ளி மூலம், நூற்​றுக்​கணக்​கான கலைஞர்​களுக்கு இலவச பயிற்சி அளித்​தார். தமிழக அரசின் ‘வாழ்​நாள் கைவினை பொக்​கிஷ விருது’, பெரி​யார் மணி​யம்மை பல்​கலைக்​கழகத்​தின் கவுரவ முனை​வர் பட்​டம், பல்​வேறு மதிப்​புமிக்க கலா​சார சபைகளிட​மிருந்து ‘வாழ்​நாள் சாதனை​யாளர் விருது’ உள்​ளிட்ட விருதுகளை பெற்​றுள்​ளார்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், ‘செட்​டி​நாடு அரசர் குடும்​பத்தை சேர்ந்த குமார ராணி மீனா முத்​தை​யா, கலைச்​சேவை, கல்​விச் சேவை இரண்​டை​யும் தமது வாழ்​வின் இருபெரும் லட்​சி​யங்​களாக கொண்டு வாழ்ந்த பெரு​மைக்​குரிய​வர். தஞ்​சாவூர் கலைக்கு புத்​து​யிர் கொடுத்​து, அதற்​காகவே குமார​ ராஜா முத்​தையா கலை மற்​றும் கைவினை கலை பள்​ளி​யின் மூலம் பயிற்​சி​யும் அளித்து வந்த அவரது பணி​கள் என்​றென்​றும் நினை​வு​கூரப்​படும்’ என தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட செய்​தி​யில், ‘செட்​டி​நாடு குமார ராணி மீனா முத்​தையா மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்​த​முற்​றேன். பன்​முகத் திறமை கொண்​ட​வரும், புகழ்​பெற்ற கல்​வி​யாள​ரு​மான மீனா முத்​தை​யாவை இழந்து வாடும் அவரது குடும்​பத்​தினருக்​கும், உறவினர்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்து கொள்​கிறேன்’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

பாமக தலை​வர் அன்​புமணி, திராவிடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, அமமுக பொதுச்​ செய​லா​ளர் டிடிவி தினகரன் உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p>குமார ராணி மீனா முத்தையா</p></div>
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம்: ஈரான் ராணுவ அதிகாரி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in