அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்தது குறித்து மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு உத்தரவு

அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்தது குறித்து மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: குடும்​பக் கட்​டுப்​பாடு அறுவை சிகிச்​சை​யின் போது பெண்​ணின் வயிற்​றுக்​குள் 5 செ.மீ. நீள​முள்ள ஊசியை வைத்து தைத்த சம்​பவம் குறித்து விசா​ரணை நடத்த தமிழ்​நாடு மருத்​து​வக் கவுன்​சிலுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை அயனாவரத்​தைச் சேர்ந்த மோகன் என்​பவரின் மனைவி சங்​கீ​தாவுக்​கு, 2010 செப்​டம்​பரில் அயனாவரம் மாநக​ராட்சி மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் 2-வது பிரசவத்​துக்​காக அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது.

அப்​போதே அவருக்கு குடும்​பக் கட்​டுப்​பாடு அறுவை சிகிச்சை நடத்​தப்​பட்​டது. சிகிச்​சைக்​குப் பிறகு வீடு திரும்​பிய அவருக்கு பல ஆண்​டு​களாக தொடர்ந்து வயிற்று வலி, ரத்​தப்​போக்கு உள்​ளிட்ட உடல்​நலப் பாதிப்​பு​கள் இருந்து வந்​துள்​ளது.

2022-ம் ஆண்டு கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் அவரது உடலை பரிசோ​தித்த போது அவரது வயிற்​றுக்​குள் சுமார் 5 செ.மீ. நீள​முள்ள அறுவை சிகிச்சை ஊசி இருப்​பது கண்​டறியப்​பட்​டது. பின்​னர் அந்த ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்​றப்​பட்​டது.

இந்​நிலை​யில், தனக்கு குடும்​பக் கட்​டுப்​பாடு அறுவை சிகிச்சை மேற்​கொண்ட பெண் மருத்​து​வருக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்​கக் கோரி சங்​கீதா சென்னை உயர் நீதி்மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மனு​தா​ரரின் வயிற்​றுக்​குள் இருந்த 5 செ.மீ. நீள ​முள்ள ஊசி அகற்​றப்​பட்டு விட்​டது. எனினும், மாநக​ராட்சி மருத்​து​வ​மனை அதி​காரி​களின் அலட்​சி​யப் போக்கை புறம் தள்​ளி​விட முடி​யாது.

இதுதொடர்​பாக விசா​ரணை நடத்த வேண்​டியது அவசி​யம். எனவே, இந்த சம்​பவம் தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட மருத்​து​வருக்கு நோட்​டீஸ் பிறப்​பித்​து, விசா​ரணை நடத்தி 2 மாதங்​களில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என தமிழ்​நாடு மருத்​துவ கவுன்​சிலுக்கு உத்​தர​விட்​டு இந்த வழக்கை முடித்​து வைத்​துள்​ளார்​.

அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்தது குறித்து மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு உத்தரவு
நடுவானில் இண்டிகோ விமான கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தால் பதற்றம்: சென்னையில் அவசர தரையிறக்கம்

X