நடுவானில் இண்டிகோ விமான கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தால் பதற்றம்: சென்னையில் அவசர தரையிறக்கம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: சென்​னைக்கு வந்த இண்​டிகோ விமானத்​தின் கழி​வறை​யில் வெடிகுண்டு மிரட்​டல் வாசகம் ஒட்​டப்​பட்​டிருந்​த​தால், விமானம் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. இதனால் சென்னை விமான நிலை​யத்​தில் பதற்​றம் ஏற்​பட்​டது.

ஐதரா​பாத்​தில் இருந்து 192 பயணி​கள் மற்​றும் 6 விமான ஊழியர்​கள் என மொத்​தம் 198 பேருடன் இண்டிகோ நிறு​வனத்​தின் பயணி​கள் விமானம் நேற்று மதி​யம் 12 மணி​யள​வில் சென்​னைக்கு புறப்​பட்​டது.

இந்​நிலை​யில் விமானம் நடு​வானில் 32 ஆயிரம் அடி உயரத்​தில் பறந்து கொண்​டிருந்த போது, கழி​வறை கண்​ணாடி​யில் ‘BOOM - 1.50 PM’ என எழுதப்​பட்ட டிஷ்யூ பேப்​பர் ஒன்று ஒட்​டப்​பட்​டிருந்​ததை விமான ஊழியர் ஒரு​வர் பார்த்​தார்.

இதை கண்டு அதிர்ச்​சி​யடைந்த அவர் உடனடி​யாக விமானிக்​குத் தகவல் தெரி​வித்​தார். இது வெடிகுண்டு மிரட்​டலாக இருக்​கலாம் என கரு​திய விமானி, சென்னை விமான நிலை​யக் கட்​டுப்​பாட்டு அறைக்கு அவசர தகவல் கொடுத்​தார்.

இதையடுத்து சென்னை விமான நிலை​யத்​தில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் துரிதப்​படுத்​தப்​பட்​டன. மதி​யம் 12.58 மணி​யள​வில் தரை​யிறங்​கிய அந்த விமானம், வழக்​க​மான இடத்​துக்​குக் கொண்டு செல்​லப்​ப​டா​மல் ரிமோட்​-பே பகு​திக்கு மாற்​றப்​பட்​டது.

அங்கு தயார் நிலை​யில் இருந்த விமான நிலைய பாது​காப்பு அதி​காரி​கள், வெடிகுண்டு நிபுணர்​கள் மற்​றும் அதிரடிப் படை வீரர்​கள் விமானத்​தைச் சுற்றி வளைத்​து, பயணி​கள் அனை​வரை​யும் அவசர​மாக கீழே இறக்​கினர்.

தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்​கள் மோப்ப நாய்​களின் உதவி​யுடன் விமானம் முழு​வதும் தீவிர சோதனை நடத்​தினர். பயணி​கள் மற்​றும் அவர்​களின் உடைமை​களும் முழு​மை​யாக பரிசோ​திக்​கப்​பட்​டன.

மிரட்​டல் கடிதத்​தில் குறிப்​பிட்​டிருந்த 1.50 மணி​யை​யும் கடந்​து, பிற்​பகல் 2.30 மணி வரை ஒன்​றரை மணி நேரத்​துக்​கும் மேலாக இந்த சோதனை நீடித்​தது. முடி​வில் சந்​தேகப்​படும்​படி​யான எந்​தப் பொருளும் சிக்​காத​தால், இது போலி வெடிகுண்டு மிரட்​டல் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இந்த சம்​பவம் குறித்து வழக்​குப் பதிவு செய்த சென்னை வி​மான நிலைய போலீ​ஸார், பயணி​கள் யாரேனும் இச்​செயலில் ஈடு​பட்​டார்​களா என்ற கோணத்​தில்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகள் நடக்க வழி ஏற்படுத்துவது அரசின் கடமை: ஐகோர்ட்

X