சமரச தீர்வு மன்றத்தில் நடுவராக பணியாற்ற மாறுபட்ட அணுகுமுறையும் பயிற்சியும் தேவை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து

சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் நீதிபதி கண்ணன் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய சட்டத்துறை செயலாளர் டி.கே.விஸ்வநாதன்.

சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் நீதிபதி கண்ணன் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய சட்டத்துறை செயலாளர் டி.கே.விஸ்வநாதன்.

Updated on: 
1 min read

சென்னை: சமரச தீர்வு மன்​றத்​தில் நடுவ​ராக பணி​யாற்​று​வதற்கு முற்​றி​லும் மாறு​பட்ட அணுகுமுறையும் சிறப்​புப்பயிற்​சி​யும் தேவை என்​றும் உச்ச நீதி​மன்​றம், உயர்நீதி​மன்ற நீதிப​தி​களுக்​கு இதற்​கான பயிற்சி அவ​சி​யம் என்​றும் நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் தெரி​வித்​துள்​ளார்.

‘பிரிசால்வ் 360’ என்ற ஆன்​லைன் சமரச தீர்வு அமைப்பு சார்​பில், ‘இணை​ய​வழி சமரச தீர்வு மற்​றும் தொழில்​நுட்​பம், நிறு​வனங்​கள் சார்ந்த நடுவர் மன்றதீர்வு’ என்ற தலைப்​பில் மாநாடு சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தினர்​களாக உயர் நீதி​மன்ற நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ், முன்​னாள் நீதிபதி கண்​ணன் கிருஷ்ண​மூர்த்தி, முன்​னாள் மத்​திய சட்​டத்​துறை செய​லா​ளர் டி.கே.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்​டனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் பேசிய​தாவது: இந்​தி​யாவில் வங்கி, வணிகம், நிதி நிறு​வனங்​கள் சார்ந்த சட்ட பிரச்​சினைகளை நீதி​மன்​றங்​களுக்கு வெளியே விரைவாகத் தீர்வு காணும் வகை​யில் ‘சமரச தீர்வு மன்​றம் முறை’ அறி​முகப்​படுத்​தப்​பட்டு செயல்​பாட்​டில் உள்​ளது. ஆனால், இம்​முறை எதிர்​பார்த்த அளவுக்கு செயல்​பட​வில்லை குறிப்​பாக, வங்​கி​கள் அல்​லாத நிதிசார் நிறு​வனங்​கள் தொடர்​பான வழக்​கு​களில், சமரச தீர்வு மன்​றங்​கள் எதிர்​பார்த்த அளவுக்கு செயல்​பட​வில்லை.

இத்​தகைய நிறு​வனங்​கள் தொடரும் பெரும்​பான்மை வழக்​கு​கள், கடன் வழங்​கப்​பட்ட வாக​னம் மற்​றும் இயந்​திரங்​களைப் பறி​முதல் செய்​வது தொடர்​பான வழக்​கு​கள்தான். ஆனால், இவற்​றின் மீதான சமரச தீர்வு மன்ற நட​வடிக்​கை​யில், நீதி​மன்​றங்​களுக்குச் சென்று இடைக்​கால உத்​தரவு கோரி அவை முடக்​கப்​படு​கின்​றன.

சில வழக்​குகளில் நடுவர் நியமிக்​கப்​பட்ட பின்​னரும்அடுத்​தகட்ட நட​வடிக்கைகள் தொடங்​கப்​படா​மல் உள்​ளன. அதேபோல் இத்​தகைய சமரச மன்​றங்​களில் நடுவர்​களை நியமிப்​ப​திலும் பல்​வேறு சிக்​கல்​கள் உள்​ளன. ஒப்​பந்​தங்​களில் குறிப்​பிடப்​பட்டு உள்ள நிறு​வனங்​கள் வாயி​லாக நடுவர்​கள் நியமிக்​கப்​பட்​டாலும், மற்​றொரு தரப்பு தங்​களது ஒப்​புதல் இன்றி ஒரு தலைப்​பட்​ச​மாக நியமனம் செயல்​பட்​ட​தாக நீதி​மன்​றங்​களுக்​குச் சென்று விசா​ரணையை முடக்கி விடு​கின்​றனர். இவற்றை முறைப்​படுத்த சமரச தீர்வு மன்​றங்​களை நடத்​தும் அமைப்​பு​களுக்கு நீதி​மன்ற அங்​கீகாரம் வழங்​கப்​பட வேண்​டும்.

அந்த அமைப்​பு​கள் தகுதி​யும் நேர்​மையும் கொண்ட நடுவர்​கள் குழுவை உரு​வாக்கி வழக்​கின் தன்​மைக்கு ஏற்ப நடுவர்​களை நியமிக்க வேண்​டும். இதற்​கான அங்​கீகார நடைமுறை உரு​வாக்​கப்​பட்​டால், நடுவர்​களை நியமிப்​ப​தில் நீதி​மன்​றங்​களின் சுமை குறையும். ஓய்வு​பெற்ற நீதிப​தி​கள் அனைவரும் நடுவர் மன்ற வழக்​கு​களை கையாளத் தகுதி​யானவர்​கள் என்று கூற முடி​யாது.

சமரச தீர்வு மன்​றத்​தில் பணி​யாற்​று​வதற்கு முற்​றி​லும் மாறு​பட்ட அணுகுமுறையும் சிறப்​புப்பயிற்​சி​யும் தேவை. உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற நீதிப​தி​களுக்​கும் இதற்​கான பயிற்சி அவ​சி​யம். சமரச தீர்வு மன்​றங்​களுக்கு தர​மான நேர்​மையான நடுவர்​களை அடை​யாளம் காண்​பதே இந்​தி​யாவில் உள்ள மிகப்​பெரிய சவால். இந்த அடிப்​படைச் சிக்​கல்​களுக்​குத் தீர்வு கண்ட பிறகே, ஆன்​லைன் சமரச தீர்வு முறையை முழு​மையாகச் செயல்​படுத்த முடியும். இவ்​வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் நீதிபதி கண்ணன் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மத்திய சட்டத்துறை செயலாளர் டி.கே.விஸ்வநாதன்.</p></div>
நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.175 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

X