நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.175 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.174 கோடியே 97 லட்சம் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் விஜய் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். மேலும் 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆனந்த், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.174 கோடியே 97 லட்சம் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் விஜய் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். மேலும் 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆனந்த், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated on: 
1 min read

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத்​துறை சார்​பில் ரூ.174.97 கோடி​யில் முடிவுற்ற திட்​டப்​பணிகளை தொடங்கி வைத்த முதல்​வர் விஜய், சென்​னை​யில் ரூ.11.15 கோடி​யில் பசுமை வழித்​தடத்​துக்கு அடிக்​கல் நாட்​டினார்.

இது​குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்னை மாநக​ராட்சி சார்​பில் மணலி மண்​டலத்​தில் ரூ.58.33 கோடி​யில் புனரமைக்​கப்​பட்ட கடப்​பாக்​கம் ஏரி, திரு​விக மண்​டலம் புளியந்​தோப்பு, தட்​டான்​குளத்​தில் ரூ. 35 கோடி​யில் கட்​டப்​பட்ட கழிவுமாற்று நிலை​யம், மணலி, மாத்​தூர் எம்.எம்.டி.ஏ. பகுதி​யில் ரூ.4 கோடி​யில் அமைக்​கப்​பட்ட நீர் உறிஞ்​சும் பூங்கா என ரூ.97.33 கோடி​யில் முடிவுற்ற திட்​டங்​களை முதல்​வர் விஜய் நேற்று காணொலி​யில் தொடங்கி வைத்​தார்.

இது​த​விர, சென்னை விமான நிலை​யப் பகுதி​யில் உள்ள பூங்கா மற்​றும் கிண்டி, கத்​திப்​பாரா முதல் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் வரை ரூ.11.15 கோடி​யில் 5.30 கிமீக்கு பசுமை வழித்​தடம் அமைப்​ப​தற்​கான 2 புதிய திட்​டப் பணிகளுக்குமுதல்வர் அடிக்​கல் நாட்​டினார்.

நக​ராட்சி நிர்​வாக இயக்​குநரகம் சார்​பில், மதுரை, விருதாசலம், திட்​டக்​குடி, ராணிப்​பேட்டை, வில்​லிபுத்​தூர், கொமார​பாளை​யம், பொள்​ளாச்சி, வெள்​ளக்​கோவில் பகுதி​களில் ரூ.73.64 கோடி​யில் முடிவுற்ற 8 திட்​டப்​பணிகளை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டக்கு முதல்​வர் விஜய் கொண்டு வந்​தார்.

மேலும், சென்னை குடிநீர் வாரியம் சார்​பில், அமேசான் (Amazon) நிறு​வனத்​தின் சமூகப் பொறுப்பு நிதி​யின் கீழ், ரூ.4 கோடி செல​வில் கோட்​டூர்​புரத்​தில் நாளொன்​றுக்கு 10 லட்​சம் லிட்​டர் (1 MLD) கழிவுநீரைச் சுத்​தி​கரித்து, மீண்​டும் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவரும் வகை​யில் நவீன தொழில்​நுட்​பங்​களு​டன்அமைக்​கப்​பட்​டுள்ள கழிவுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யத்தையும் முதல்​வர் திறந்து வைத்​தார்.

நீர்​வளத்​துறை வழங்​கிய 6,000 சதுர அடி நிலப்​பரப்​பில், பக்​கிங்​ஹாம் கால்​வாய் அடை​யாறு ஆற்​றில் கலக்​கும் முகத்​து​வாரப் பகுதி​யில் நவீன தொழில்​நுட்​பங்​களு​டன் இந்​த நிலை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. மேலும், சென்னை மாநக​ராட்​சிக்கு வழங்​கப்​பட்ட “சிறந்த மோட்​டார் அல்​லாத போக்​கு​வரத்து அமைப்​பைக் கொண்ட நகரம்” விருது, மத்​திய அரசின் தூய்மை இந்​தியா இயக்​கத்​தின் கீழ் தமிழகத்​தின் முதல் தூய்மைநகர​மாக தேர்வு செய்​யப்பட்ட தேனி-அல்​லிநகரம் நக​ராட்​சிக்கு “தூய்மை நகரம்” விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த விருதுகளை அதி​காரி​கள் முதல்​வரிடம் காண்​பித்து வாழ்த்து பெற்​றனர்.

நிகழ்​வில், தலை​மைச்​செயலர் சாய்​குமார், துறை​யின் செயலர் ககன்​தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்​குநர் த.ஆனந்த், நக​ராட்சி நிர்​வாக இயக்​குநர் மதுசூதன் ரெட்டி, சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்றனர்.

<div class="paragraphs"><p>சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.174 கோடியே 97 லட்சம் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் விஜய் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். மேலும் 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆனந்த், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் மதுசூதன் ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p></div>
“ஒரு தொண்டனை கூட வாங்க முடியாது” - ரகுபதிக்கு தவெக பதிலடி

X