மதுரை தெற்கு மதிமுகவுக்கு சாதகமான தொகுதியாக மாறிவிட்டதா; மீண்டும் பூமிநாதன் போட்டியா?

பூமிநாதன்

பூமிநாதன்

Updated on
2 min read

மதுரை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மீண்டும் மதுரை தெற்கு ஒதுக்கப்படலாம் என்றும், அங்கு பூமிநாதன் வேட்பாளராக களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

மதுரை கிழக்கு தொகுதியாக இருந்து தொகுதி மறுசீரமைப்பு மூலம் 2011-ல் மதுரை தெற்கு தொகுதி உருவானது. இதன்பின், இத்தொகுதியில் 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், அண்ணாத்துரை வென்றார்.

2016-ல் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்எஸ். சரவணன் வெற்றி பெற்றார். 2021-ல் தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில், இத் தொகுதியில் போட்டியிட்ட மதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த புதூர் எம். பூமிநாதன் 62,812 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று, தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.

ஏற்கெனவே இத்தொகுதி மதுரை கிழக்கு என்ற பெயரில் இருந்தபோது, மதிமுக சார்பில்,  2 முறை போட்டியிட்டாலும், 3 முறை திமுக கூட்டணியில் போட்டியிட்டு தெற்கு தொகுதியை வென்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுத்து பல்வேறு குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். நீண்ட நாட்களாக தொகுதியில் பட்டா பெறாதவர்களுக்கு போராடி பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த தீவிர, மக்கள் நல பணியால் மதுரை தெற்கு மதிமுகவுக்கு சாதகமான தொகுதியாக மாறிவிட்டதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் பூமிநாதனுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக மதுரை தெற்கு தொகுதியை ஒதுக்க தொடக்கத்தில் இருந்த  கட்சி தலைமை வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியிடம்  10 தொகுதிகள் அடங்கிய பட்டியலிலும் மதுரை தெற்கும் முதலில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இதன்மூலம்  மதுரை தெற்கு உறுதியாக  மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.  கட்சி தொடங்கிய காலம் தொடங்கி வைகோவுடன் பயணிக்கும் முக்கிய நபர்களில் ஒருவரும், எனது அன்பு சகோதரர் ‘ பொடா’ பூமிநாதன் என வைகோ அழைக்கும் நபராக இருக்கும் பூமிநாதனுக்கே வாய்ப்பளிக்கப்படும்  என்றும்,  கடந்த முறை போன்று மீண்டும் அவர் உதயசூரியனில்  போட்டியிடலாம் என்றும்  அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, அதிமுக - பாஜக கூட்டணி முடிவான நாளில் இருந்தே இத்தொகுதியை பாஜக குறி  வைத்துள்ளது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர்  ராம. ஸ்ரீனிவாசன் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையில் தொகுதியில் தேர்தல் பணியை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். தனது பிறந்தநாளை கூட தொகுதியில் கொண்டாடினார். மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதியில்  மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் தொகுதியை பாஜக கேட்கும் நிலையில், 2 கிடைக்காவிடின் ஒன்றாவது ஒதுக்கப்படும். அது தெற்கு தொகுதியாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

ஒருவேளை தெற்கு பாஜகவுக்கு ஒதுக்கினால் ராம.ஸ்ரீனிவாசனும், அவருக்கு முன்னாள் இருந்த மாநகரச் செயலாளர் கேகே.சீனிவாசனுக்கும் இடையே போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. இங்குள்ள குறிப்பிட்ட சமூக ஓட்டுக்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, பாஜக நம்புகிறது.

பூமிநாதன் சார்ந்த சமூக ஓட்டுக்கள், தொகுதியில் அவர் செய்த பல்வேறு வளர்ச்சித் திட்ட சாதனைகள் அவருக்கும் மீண்டும் வெற்றி தேடிக் கொடுக்கும் என்பது திமுகவின் பலமாக உள்ளது. இதனால், மீண்டும் தெற்கில் சூரியன் உதிக்கும் என்றும் நம்புகின்றனர்.

ஒருவேளை இத்தொகுதி அதிமுகவுக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டால் மீண்டும் எஎஸ்எஸ். சரவணனுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இத்தொகுதியில் தவெக, நாம் தமிழர் கட்சியினரும் போட்டியிடும் நிலையில் களம் யாருக்கு சாதகம் என்பது பொறுத்து இருந்தே பார்க்கவேண்டியதாக அமையும்.

<div class="paragraphs"><p>பூமிநாதன்</p></div>
தமிழகத்தில் மார்ச் 26 வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி உயர வாய்ப்பு: வானிலை முன்னறிவிப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in