இன்றே விருப்ப மனு... இன்றே வேட்பாளர்கள் அறிவிப்பு! - தேர்தல் நடவடிக்கைகளை முறைப்படி செய்யும் மதிமுக

வைகோ

வைகோ

Updated on
1 min read

மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

தமிழக சட்டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்றுள்ள மதிமுக-வுக்கு 4 தொகு​திகள் ஒதுக்​கப்​பட்​டுள்ளன. இந்தத் தொகு​தி​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்களை தேர்வு செய்​யும் பணிகள் இன்று (மார்ச் 27) தொடங்கு​கிறது. இதையொட்டி எழும்​பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவல​கமான தாயகத்​தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை விருப்ப மனு விநி​யோகம் நடைபெறுகிறது.

தேர்​தலில் போட்​டியிட விரும்​பும் கட்சி​யினர் ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்​ளலாம். விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய மதியம் 3 மணி வரை கால அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்கான கட்ட​ண​மாகப் பொதுத் தொகு​திக்கு 25 ஆயிரம் ரூபா​யும், தனித் தொகு​திக்கு 10 ஆயிரம் ரூபா​யும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இத்துடன் பூர்த்தி செய்​யப்​பட்ட மனுக்களை கட்சி​யின் அமைப்புச் செயலாளர் சு.குரு​நாதனிடம் ஒப்படைக்​கு​மாறு கட்சித் தலைமை அறிவுறுத்​தி​யுள்​ளது.

முன்ன​தாக, கட்சி​யின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன ராஜ் தலைமை​யில் மாவட்டச் செயலா​ளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் தேர்தல் பணிகள் மற்றும் வேட்​பாளர் தேர்வு குறித்து விரிவாக ஆலோசிக்​கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, பிற்​பகல் 3.30 மணி அளவில் ஆட்சி மன்றக் குழு​வினர் முன்னிலை​யில் பெறப்​பட்ட விண்​ணப்​பங்கள் அனைத்​தும் ஆய்வு செய்​யப்​பட்டு, அதில் தேர்ந்​தெடுக்​கப்​படும் பெயர்கள் உடனடியாக வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தேர்தல் தேதி அறிவிக்​கப்​பட்டு​விட்ட நிலை​யில், ஒரே நாளில் விருப்ப மனு விநி​யோகம், விருப்ப மனு தாக்கல் மற்றும் ஆய்வு என அனைத்து நடவடிக்கைளை​யும் முறைப்படி முடித்து வேட்​பாளர்களை அறிவிக்க மதிமுக தலைமை திட்​ட​மிட்​டிருப்பது குறிப்​பிடத்​தக்​கது.

‘சிரித்துக் கொண்டே அழுகின்றோம்’ - மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக குழுவினருடன் மதிமுக குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், "மதிமுக சார்பில் அளிக்கப்பட்ட விருப்பப் பட்டியலில் இருந்தே 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. நாங்கள் கேட்ட தொகுதிகளே கிடைத்துள்ளது மகிழ்ச்சிதான்.

அதேசமயம், எங்களுடைய தகுதி, தரத்துக்கு ஏற்ப ‘சீட்’தரவில்லையே என்ற வருத்தமும் எங்களுக்கு இருக்கிறது. சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்... நாங்கள் சிரித்துக் கொண்டே அழும் நிலையில் இருக்கிறோம். மதிமுக-வின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இரண்டாவது, எங்களுக்கு கொடுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் எங்களுடைய சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது" என்றார்.

<div class="paragraphs"><p>வைகோ</p></div>
“தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும்” - வானதி சீனிவாசன் விருப்பம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in