எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 641 இடங்கள் ஒதுக்கீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.

Updated on
2 min read

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான தரவரிசை பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. அரசுப் பள்ளி மாண​வர்​களுக்​கு, 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் 641 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

தமி​ழ​கத்​தில் அரசு மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் பல் மருத்​து​வக் கல்​லூரி​களின் இடங்​கள், தனி​யார் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீடு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்​கான இடங்​களுக்கு மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) கலந்​தாய்வு நடத்தி வரு​கிறது.

தமி​ழ​கத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் (அரசு ஒதுக்​கீடு) 7,157 எம்​பிபிஎஸ் இடங்​கள், 1,383 பிடிஎஸ் இடங்​கள் உள்​ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் அரசுப் பள்ளி மாண​வர்​களுக்கு 537 எம்​பிபிஎஸ் இடங்​கள், 104 பிடிஎஸ் இடங்​கள் இருக்​கின்​றன. இவை தவிர தனி​யார் கல்​லூரி​களில் நிர்​வாக ஒதுக்​கீட்​டுக்கு 1,966 எம்​பிபிஎஸ், 580 பிடிஎஸ் இடங்​கள் உள்​ளன.

இந்த படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்​வி​யாண்​டில் மாண​வர் சேர்க்​கைக்கு விண்​ணப்​பிப்​பது கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்​கி, ஜூலை 27-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. மொத்​தம் 72,633 பேர் விண்​ணப்​பித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தில் தகு​தி​யான மாண​வர்​களின் தரவரிசை பட்​டியலை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று வெளி​யிட்​டார். சுகா​தா​ரத் துறை செயலர் தாரேஸ் அகமது, மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) வா.லோக​நாயகி, மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி துணை இயக்​குநர்​கள் (தேர்​வுக் குழு) கரா​மத், பால​நாக நந்​தினி, சாந்​தினி ஆகி​யோர் உடன் இருந்​தனர்.

இந்த பட்​டியலில் அரசு ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு 35,926 பேர், அரசு பள்ளி மாண​வர்​களுக்​கான 7.5 சதவீத ஒதுக்​கீடு இடங்​களுக்கு 3,625 பேர், நிர்​வாக ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு 26,956 பேர் இடம் பெற்​றுள்​ளனர். விழுப்​புரத்​தைச் சேர்ந்த வெங்​கடபதி வேலா​யுதம் என்ற மாண​வர் நீட் தேர்​வில் 720-க்கு 705 மதிப்​பெண்​கள் பெற்று அகில இந்​திய அளவில் 12-வது இடத்​தை​யும், தமிழக அளவில் முதலிடத்​தை​யும் பிடித்த அவர், தரவரிசை பட்​டியலில் முதலிடம் பிடித்​துள்​ளார்.

புதுக்​கோட்டை மாணவி வி.னிகா 700 மதிப்​பெண்​களு​டன் 2-ம் இடத்​தை​யும், விருதுநகர் மாண​வர் ஏ.எம்​.சுடர் 696 மதிப்​பெண்​களு​டன் 3-ம் இடத்​தை​யும் பிடித்​துள்​ளனர். தரவரிசை பட்​டியலில் முதல் 10 இடங்​களில் 5 மாண​வர்​கள், 5 மாணவி​கள் இடம் பெற்​றுள்​ளனர்.

அதே​போல், அரசு பள்ளி மாண​வர்​களுக்​கான 7.5 சதவீத ஒதுக்​கீடு தரவரிசை பட்​டியலில் நாகப்​பட்​டினம் மாண​வர் எம்​.​தினேஷ் 599 மதிப்​பெண்​களு​டன் முதல் இடத்​தை​யும், சேலம் மாண​வர் பி.எஸ்​.தரனீஷ் 595 மதிப்​பெண்​களு​டன் 2-ம் இடத்​தை​யும், புதுக்​கோட்டை மாண​வர் ஆர்​.​ராஜேஷ் 595 மதிப்​பெண்​களு​டன் 3-ம் இடத்​தை​யும் பிடித்​துள்​ளனர்.

அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான பொதுப் பிரிவு கலந்​தாய்வு ஆக.13-ம் தேதி https://tnmedicalselection.net என்ற சுகா​தா​ரத் துறை இணை​யதளத்​தில் தொடங்​கு​கிறது.

அதே​நாளில், சிறப்​புப் பிரிவு கலந்​தாய்வு (மாற்​றுத் திற​னாளி, முன்​னாள் ராணுவ வீரர்​களின் வாரிசு, விளை​யாட்டு வீரர்) மற்​றும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டு இடங்​களுக்கு அரசுப் பள்ளி மாண​வர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாகச் சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை வளாகத்​தில் நடக்​கிறது. தரவரிசை பட்​டியல் மற்​றும் கலந்​தாய்வு தொடர்​பான அனைத்து விவரங்​களை​யும் இணை​யதளத்​தைப் பார்த்து தெரிந்து கொள்​ளலாம்.

போலி ஆவணம்: இந்த ஆண்டு திருப்​பூர், திரு​வள்​ளுர் மற்​றும் நாமக்​கல் ஆகிய 3 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் தலா 50 கூடு​தல் எம்​பிபிஎஸ் இடங்​கள் கிடைத்​துள்​ளன. தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் மொத்​தம் 700 இடங்​கள் கூடு​தலாகக் கிடைத்​துள்​ளன. கடந்த ஆண்டை விட 200 பிடிஎஸ் இடங்​கள் குறைந்​துள்​ளன. மருத்​து​வப் படிப்​பில் சேரு​வதற்​காகக் கடந்த 2024-ம் ஆண்​டில் 9 பேரும், 2025-ம் ஆண்​டில் 25 பேரும், இந்த ஆண்​டில் 5 பேரும் போலி ஆவணங்​கள் மூலம் விண்​ணப்​பித்​துள்​ளனர். ஒரு மாண​வர் நீட் தேர்​வில் தான் எடுத்த 170 மதிப்​பெண்​ணை, 552 ஆக திருத்​தி​யுள்​ளார். என்​ஆர்ஐ பிரி​வில் 512 மாண​வர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். அவர்​களின் தூதரக சான்​றிதழ்​கள் சரி​பார்க்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது.

நீட் தேர்வு ஏழை மாண​வர்​களுக்​கும், நமது கொள்​கை​களுக்​கும் எதி​ரானது. தொடர்ந்து சட்​டப் போராட்​டம் நடத்​து​வோம். அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக வசூலித்​தால் நடவடிக்கை எடுக்​கப்​படும். ஒரு கல்​லூரி கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​திருப்​பது உறு​தி​யாகி உள்​ள​தால், அந்த விவ​காரம் அடுத்​தக்​கட்​டத்​துக்​குச் சென்​றுள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் அருண்​ராஜ் தெரிவித்​தார்​. இந்​நிகழ்ச்​சி​யில் துணை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான தரவரிசைப் பட்​டியலை​யும் அமைச்​சர் அருண்​ராஜ் வெளி​யிட்​டார்​.

<div class="paragraphs"><p>எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். </p></div>
நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in