தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி அதிகரிக்கும்

18-ம் தேதி வரை வறண்ட வானிலை
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி அதிகரிக்கும்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் தவிர்த்து பிற மாவட்​டங்​களில் இன்று முதல் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நில​வக்​கூடும். அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 7 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக்​கூடும்.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றின் வேக​மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, இன்று (ஜூலை 13) முதல் 18-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் பொது​வாக வறண்ட வானிலை நில​வக்​கூடும். அவ்​வப்​போது ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் இன்று முதல் 16-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட ஓரிரு இடங்​களில் 7 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவு வரை உயரக்​கூடும். தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​க

பட்​ச​மாக கோவை மாவட்​டம் சின்​னக்​கல்​லாரில் 2 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு வானிலை ஆய்வு மையத்தின் செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி அதிகரிக்கும்
விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in