இடதுசாரி அணி தனியாக உருவாக வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தல்

இடதுசாரி அணி தனியாக உருவாக வேண்டும்: மார்க்சிஸ்ட்  மாநில செயலாளர் வலியுறுத்தல்
Updated on
1 min read

தூத்​துக்​குடி: அரசி​யலில் வலு​வான பங்​களிப்​பைப் பெற இடதுசாரி அணி தனி​யாக உரு​வாக வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார். மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் கட்​சி​யின் 12-வது மாநில மாநாடு தூத்​துக்​குடி​யில் நேற்று தொடங்​கியது.

கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பழ.ஆசைத்​தம்பி தலைமை வகித்​தார். அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் வீ.சங்​கர் மாநாட்டை தொடங்​கி​வைத்​துப் பேசி​னார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் பேசும்​போது, “வாக்​குரிமை பறிப்பு என்​பதை ஆழமாக சிந்​தித்​தால் குடி​யுரிமை பறிப்​பாகும்.

சாதி, மதம், மொழி தொடர்​பான தீர்ப்​பு​களில் நீதிப​தி​கள் நல்​லிணக்​கத்​தைக் கடைப்​பிடிக்க வேண்​டும். பிரதமரும், உள்​துறை அமைச்​சரும் நாட்​டின் ஒற்​றுமையை சிதைக்​கிறார்​கள். மதச் சார்​பின்​மையை சிதைக்​கப் பார்க்​கிறார்​கள்.

கம்​யூனிஸ்ட்​கள், ஜனநாயக முற்​போக்கு சக்​தி​கள் இருக்​கும்​வரை அது நடக்​காது. அந்த வகை​யில் தமிழக முதல்​வர் ஜனநாயகத்​துக்​கான போரைத் தொடங்​கி​வைத்​துள்​ளார்.

மதத்​தின் பெய​ரால் பாஜக தொடங்​கி​யிருக்​கிற கருத்​தி​யல் போருக்கு நாம் தயா​ராக வேண்​டும்” என்​றார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் பேசி​ய​தாவது: மாநிலங்​களில் ஆட்சி அதி​காரங்​களை கைப்​பற்ற அமலாக்​கத் துறை, வரு​மான வரித் துறை, தேர்​தல் ஆணை​யம், சிபிஐ தொடங்கி தற்​போது நீதித் துறையை​யும் பயன்​படுத்​துகிறார்​கள். இந்த சவால்​களை எதிர்​கொள்​வதற்கு இடது​சா​ரி​களின் ஒற்​றுமை மிக​வும் அவசி​யம்.

எனவே, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் மற்​றும் முற்​போக்கு சிந்​தனை​யாளர்​கள், பல முற்​போக்கு அமைப்​பு​களை கொண்ட இடது​சாரி அணியை உரு​வாக்க வேண்​டும். மதவாத கட்​சிகளை எதிர்த்​துப் போராட மதச்​சார்​பற்ற கட்​சிகளின் ஒற்​றுமை அவசி​யம்.

அதே​நேரத்​தில் மத, தாராளமய கொள்​கைக்கு மாற்​றாக ஒரு இடது​சா​ரிக் கொள்​கை​யை, தொழிலா​ளர் நலனை முன்​னிறுத்​தும் பொருளா​தா​ரக் கொள்​கை​யை, ஒரு மாற்​றுக் கொள்​கையை நாம் முன்​வைக்க வேண்​டி​யுள்​ளது.

அந்த மாற்​றுக் கொள்​கையை முன்​வைத்து இடது​சாரி அணி உரு​வாக வேண்​டும். நாம் பலமில்​லாமல் போனால் நாம் நினைக்​கிற மாற்​றத்தை அரசி​யலில் ஏற்​படுத்த முடி​யாது.

எனவே, வலு​வான இடது​சாரி ஜனநாயக மாற்றை உரு​வாக்க அனை​வரும் சேர்ந்து முயற்​சிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் (மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்​சி​யின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் திபங்​கர், தமிழக அமைச்​சர் பி.கீ​தாஜீவன். விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன், மக்​கள் அதி​காரம் அமைப்​பின் மாநிலச் செய​லா​ளர்​ திருச்​சி செழியன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

இடதுசாரி அணி தனியாக உருவாக வேண்டும்: மார்க்சிஸ்ட்  மாநில செயலாளர் வலியுறுத்தல்
நாடு முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in