

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் பிரச்சாரப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி திருவொற்றியூர், மயிலாப்பூரில் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து பழனி மற்றும் திண்டுக்கல்லில் 12-ம் தேதியும், பத்மநாபபுரத்தில் 20-ம் தேதியும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன், கோவையில் 16-ம் தேதியும், பழனியில் 17-ம் தேதியும் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பெரம்பலூரில் நாளை பிரச்சாரம் செய்கிறார். அதைத்தொடர்ந்து 12-ம் தேதி கந்தர்வக்கோட்டையிலும், 13-ம் தேதி அறந்தாங்கியிலும், 14-ம் தேதி திருவாரூரிலும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.