

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை அறிவித்தார். வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை. கடந்த ஜனவரியில் ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை, சென்னை அறிவாலயத்தில் நேற்று சந்தித்தார். சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தங்கள் கட்சி ஆதரவை வழங்கினார். அதன்பின் விருதாம்பிகை நிருபர்களிடம் கூறுகையில், “2019 தேர்தலில் இருந்து திமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம். வன்னியர்களுக்கு திமுக பல்வேறு நல்ல விஷயங்களை செய்துள்ளது” என்றார்.