போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மாணவர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​று​வதற்கு பதில் பல்​லா​யிரக்​கணக்​கான காவல்​துறை​யினர் மற்​றும் துணை ராணுவ படை​யினரை கொண்டு கொலை​வெறி தாக்​குதல் நடத்​து​வது, இணை​யதள இணைப்பை துண்​டிப்​பது, மெட்ரோ ரயில் நிலை​யங்​களை மூடு​வது என வேண்​டாத வேலைகளை​யெல்​லாம் பிரதமர் மோடி செய்​து​கொண்​டிருக்​கிறார்.

தர்​மேந்​திர பிர​தான் என்​கிற ஒரு அமைச்​சரை நீக்​கு​வ​தால் அவரது அரசு கவிழ்ந்​து​ விட போகிறதா என்ன? எனவே, மத்​திய கல்​வித்​துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானை பதவியி​லிருந்து நீக்கி நாடு முழு​வதும் நடந்துவரும் போராட்​டங்​களை முடிவுக்கு கொண்​டுவர பிரதமர் மோடி முடி​வெடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சாலைகள் சாகசத்துக்கு அல்ல; பயணத்துக்கே: மாணவர்களுக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in