முல்லைப் பூ கிலோ ரூ.2,000-க்கு விற்பனை: விருதுநகரில் மல்லிகை விலையை தாண்டியது

விருதுநகர்​ சந்​தை​யில்​ பூக்​களை வாங்​கிய பெண்​கள்​.

விருதுநகர்​ சந்​தை​யில்​ பூக்​களை வாங்​கிய பெண்​கள்​.

Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் சந்​தை​யில் ஒரு கிலோ முல்​லைப் பூ நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்​பனை செய்​யப்​பட்டது.

விருதுநகரில் மளி​கைப் பொருட்​களைப் போல மலர் சந்​தை​யும் புகழ்​பெற்​றது. அருப்​புக்​கோட்​டை, திண்​டுக்​கல் மாவட்​டம் நிலக்​கோட்டை பகு​தி​களி​லிருந்து விருதுநகர் சந்​தைக்கு தின​மும் மல்​லிகை மற்​றும் பல்​வேறு வகை​யான பூக்​கள் விற்​பனைக்​காக கொண்​டு​வரப்​படு​கின்​றன.

இங்​கிருந்து வியா​பாரி​கள் மொத்​த​மாக பூக்​களை வாங்​கிச் சென்​று, பல்​வேறு பகு​தி​களி​லும் விற்​பனை செய்​கின்​றனர். இந்​நிலை​யில், நேற்று சனிப்​பிரதோஷம், இன்று சிவ​ராத்​திரி என்​ப​தால் பூக்​களின் விலை பலமடங்கு அதி​கரித்​துள்​ளது.

விருதுநகர் சந்​தை​யில் நேற்று முன்​தினம் ஒரு கிலோ ரூ.1,400-க்கு விற்​பனை செய்​யப்​பட்ட மல்​லிகைப் பூ நேற்று ரூ.1,700-க்கு விற்​பனை​யானது, ஆனால், அதை​விட அதிக​மாக முல்​லைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்​துக்கு விற்​பனை​யானது. இதே​போல, பிச்​சிப்பூ கிலோ ரூ.1,500, கனகாம்​பரம் ரூ.1,600, செவ்​வந்தி ரூ.300, அரளி ரூ.300, சம்​பங்கி ரூ.400, ரோஸ் ரூ.200, கோழிக்​கொண்டை ரூ.200 என்ற விலை​யில் விற்​பனை​யாகின. மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்டு சிறு வியா​பாரி​கள் மற்​றும் பொது​மக்​கள் ஏராள​மானோர் பூக்​களை வாங்க விருதுநகர் மலர் சந்​தை​யில் குவிந்​தனர்.

<div class="paragraphs"><p>விருதுநகர்​ சந்​தை​யில்​ பூக்​களை வாங்​கிய பெண்​கள்​.</p></div>
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஎன்பி கட்சி: இந்தியா உடனான உறவைப் பேண விருப்பம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in