அரசின் வருவாயை அதிகரித்து கடன் சுமையை கட்டுப்படுத்துவதே நோக்கம்: நிதி அமைச்சர் மரிய வில்சன் விளக்கம்

அரசின் வருவாயை அதிகரித்து கடன் சுமையை கட்டுப்படுத்துவதே நோக்கம்: நிதி அமைச்சர் மரிய வில்சன் விளக்கம்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தின் வரு​வாயை அதி​கரித்து கடன் சுமையை கட்​டுப்​படுத்​து​வதே தவெக அரசின் முக்​கிய நோக்​கம் என்று பேர​வை​யில் நிதி அமைச்​சர் மரிய வில்​சன் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று பொது பட்​ஜெட் மீதான கேள்விகளுக்கு நிதி அமைச்​சர் மரியவில்​சன் நேற்று பதில் அளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: பதவி​யேற்ற முதல் நாளி​லேயே மாநிலத்​தின் நிதி​நிலை தொடர்​பாக விரி​வான அறிக்​கை​யைத் தயாரிக்​கு​மாறு முதல்​வர் அறி​வுறுத்தினார்.

அதில் 3 துறை​களுக்கான அறிக்​கை​யைத் தயாரித்துள்​ளோம். அதில் எந்த அளவுக்கு நிதி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது என்​பது குறித்து விரை​வில் வெளிப்​படை​யாக தெரி​விப்​போம்.

மத்​திய அரசின் கிராமப்​புறத் திட்​டங்​களைச் செயல்​படுத்த ரூ.12,643 கோடி​யும், மின்​வாரிய இழப்பை ஈடு​கட்ட ரூ.5,000 கோடி​யும், விவ​சாயக் கடன் தள்​ளு​படிக்கு ரூ.5,932 கோடி​யும், இலவச மின்​சா​ரத்​துக்கு ரூ.1,545 கோடி​யும் கூடு​தலாக ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

டெண்​டர்​களை வழங்​கு​வ​தில் முந்​தைய அரசு செய்த முறை​கேடுகளை ஆரா​யத் தொடங்கியுள்​ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். முன்​ன​தாக, முதல்​வர் விஜய்யை புகழ்ந்​து, “கருணை இருந்​தால் வள்​ளலாகலாம், கடமை இருந்​தால் வீர​னாகலாம், பொறுமை இருந்​தால் மனித​னாகலாம், மூன்​றும் இருந்​தால் தலைவனாகலாம்’’ என்ற பாடலை அமைச்சர் மரிய வில்​சன் பாடி​னார்.

அமைச்​சரின் பதில் உரைக்​குப் பிறகு, பேர​வை​யில் நடை​பெற்ற விவாதம்: தங்​கம் தென்​னரசு (தி​முக): கடந்த ஆண்​டின் உண்​மை​யான செல​வினத்தை மட்​டும் அடிப்​படை​யாகக் கொண்டு அடுத்த ஆண்​டுக்​கான பட்​ஜெட் மதிப்​பீட்டை மேற்​கொள்​ளக் கூடாது.

மாநிலத்​தின் சொந்த வரி வரு​வாய் குறைந்​ததற்கு ஜிஎஸ்டி வரி விகிதங்​கள் குறைக்​கப்​பட்​டதும் ஒரு காரணம். ஆனால், இந்த ஆண்டு அதில் இருந்து கூடு​தல் வரு​வாய் கிடைக்​கும் என தெரி​கிறது.

இந்​நிலை​யில், கடந்த 60 முதல் 70 நாட்​களில் அரசுக் கரு​வூலத்​துக்கு ரூ.15 ஆயிரம் கோடி கொண்டு வந்​துள்​ள​தாக நிதி அமைச்​சர் தெரி​வித்​திருந்​தார்.

அது மாநில அரசின் சொந்த வரு​வாயா அல்​லது மத்​திய அரசின் மானி​யங்​களா? இடைக்​கால பட்​ஜெட்​டில் வரு​வாய் பற்​றாக்​குறை ரூ.48,696 கோடி​யாக இருக்​கும் என மதிப்​பிடப்​பட்​டிருந்​தது.

அதில் அரசு ஊழியர்​களின் ஓய்​வூ​தி​யத் திட்​டத்​துக்​காக ரூ.11 ஆயிரம் கோடி​யும் கணக்​கில் எடுத்​துக் கொள்​ளப்​பட்​டது. அதன்​பின்​னும் தற்​போது வரு​வாய் பற்​றாக்​குறை ரூ.55 ஆயிரம் கோடி​யாக உள்​ளதே? அமைச்​சர் மரிய வில்​சன்: கலால் வரு​வா​யில் மட்​டும் சுமார் ரூ.1,500 கோடி கூடு​தல் வரு​வாய் கிடைக்க வாய்ப்பு உள்​ளது.

அதில் உரிமக் கட்​ட​ணம், மது​பாட்​டில்​களை திரும்​பப் பெறு​தல் உள்​ளிட்ட நடவடிக்​கைகள் மற்​றும் செயல்​திறனை மேம்​படுத்​து​வதன் மூலம் கூடு​தல் வரு​வாய் உரு​வாக்​கப்​படு​கிறது.

மோட்​டார் வாகன வரியைப் பொருத்​தவரை, பேன்சி எண்​கள் ஏலம் உள்​ளிட்ட சீர்​திருத்​தங்​கள் மூலம் சுமார் ரூ.750 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது.

முத்​திரை மற்​றும் பதிவுத்​துறை வரு​வா​யில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி கூடு​தல் வரு​வாய் எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சில கட்​ட​ணங்​களில் திருத்​தம் செய்​வது உள்​ளிட்ட நடவடிக்​கைகள் மூலம் வரு​வாய் அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளது.

இதுத​விர ஜிஎஸ்​டி, சுரங்க வரு​வாய் உள்​ளிட்ட பல்​வேறு இனங்​களி​லும் கூடு​தல் வரு​வாயை உரு​வாக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த நடவடிக்​கைகள் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி கூடு​தல் வரு​வாய் கிடைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தமிழக அரசு அதிக கடன் வாங்​கு​வதை கட்​டுப்​படுத்​து​வ​தில் முதல்​வர் விஜய் உறு​தி​யாக உள்​ளார். எனவே, எவ்​வளவு தூரம் செல​வினங்​களைக் கட்​டுப்​படுத்த முடி​யுமோ, அதே அளவுக்கு வரு​வாயைப் பெருக்​கும் நடவடிக்​கைகளை​யும் மேற்​கொண்டு வரு​கிறோம். தமிழகத்தை 1.5 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ர​மாக உரு​வாக்​கும் இலக்​கை நோக்​கி நடவடிக்​கைகளை எடுத்​து​வரு​கிறோம்​. இவ்​வாறு அந்​த வி​வாதம்​ நடைபெற்​றது.

அரசின் வருவாயை அதிகரித்து கடன் சுமையை கட்டுப்படுத்துவதே நோக்கம்: நிதி அமைச்சர் மரிய வில்சன் விளக்கம்
கிராமப்புற பள்ளிகளில் தூய்மைப் பணிக்கு ரூ.87 கோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in