மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு @ ஶ்ரீவில்லிபுத்தூர்

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு @ ஶ்ரீவில்லிபுத்தூர்
Updated on: 
1 min read

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிவந்திபட்டி பத்திரகாளி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவில் பத்திரகாளி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவை முன்னிட்டு தினசரி இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், மாவட்ட அளவிலான கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளும் நடைபெற்றன.

நேற்று 8 வயது முதல் 15 வயது வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சிவந்தபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், செண்பகத்தோப்பு சாலை, அன்னையன் தோப்பு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு @ ஶ்ரீவில்லிபுத்தூர்
‘ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் அரசு நந்தவனப் பூங்கா அமைக்கக்கூடாது’: அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in