தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்தது ஏன்? - மன்னார்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ் விளக்கம்

மன்னார்குடியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ எஸ்.காமராஜ்.

மன்னார்குடியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ எஸ்.காமராஜ்.

Updated on
1 min read

திருவாரூர்: தவெகவை ஆதரித்​தது ஏன்? என மன்​னார்​குடி எம்எல்ஏ எஸ்​.​காம​ராஜ் விளக்​கம் அளித்​துள்​ளார். திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி தொகு​தி​யில் அதி​முக கூட்​ட​ணி​யில் அமமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர் எஸ்​.​காம​ராஜ்.

விஜய் முதல்​வ​ராகப் பதவி​யேற்​ப​தற்கு முன்​ன​தாக, இவர் தவெக​வுக்கு ஆதரவு அளிப்​பது தொடர்​பாக ஒரு கடிதம் வெளி​யானது. ஆனால், அந்​தக் கடிதம் போலி​யானது என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரனும், எம்​எல்ஏ காம​ராஜும் மறுப்பு தெரி​வித்​தனர்.

இதைத் தொடர்ந்​து, சட்​டப்பேர​வை​யில் பேசிய எம்​எல்ஏ எஸ்​.​காம​ராஜ், தவெக அரசுக்​குத் தனது ஆதரவை வெளிப்​படை​யாக அறி​வித்​தார். இதையடுத்​து, அவரை கட்​சியி​லிருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், எம்​எல்​ஏ​வாக பொறுப்​பேற்ற பின்​னர் நேற்று மன்​னார்​குடி வந்த எஸ்​.​காம​ராஜுக்கு அவரது ஆதர​வாளர்​கள் வரவேற்பு அளித்​தனர். அப்​போது அவர் பேசி​ய​தாவது: பேர​வைத் தேர்​தலில் இளைஞர்​கள் மத்​தி​யில் ஏற்​பட்ட எழுச்​சி​யால், அரசி​யல் ஜாம்​ப​வான்​கள் பலரும் தோற்​றுப் போய்​விட்​டனர்.

மன்​னார்​குடி​யிலும் அத்​தகைய எழுச்சி இருந்​த​போ​தி​லும், தலை தப்​பித்​தது தம்​பி​ரான் புண்​ணி​யம் என்ற நிலை​யில், கூட்​டணி கட்​சி​யினர் மற்​றும் உங்​களது உழைப்​பால் எனக்கு வெற்றி கிடைத்​துள்​ளது.

அரசியல் சூழலுக்கு ஏற்ப...

இதனால், தமிழகத்​தில் நில​வும் அரசி​யல் சூழலுக்கு ஏற்ப, முடிவு எடுக்க வேண்​டிய நிலை ஏற்​பட்டு விட்​டது. இந்த முடிவை 99 சதவீதம் பேர் சரி என தெரி​வித்​துள்​ளனர். ஒருசிலர், காலம் தாழ்த்தி எடுத்​திருக்​கலாம் என்​றும் தெரி​வித்​தார்​கள்.

ஆளுங்​கட்​சிக்கு ஆதர​வாக இருந்​தால் திட்​டங்​களை மக்​களுக்கு எளி​தாக பெற்​றுத்தர முடி​யும் என்​ப​தால் இந்த முடிவை எடுத்​துள்​ளேன்.

இந்த தொகு​தி​யில் எம்​எல்​ஏ​வாக இருந்த டிஆர்​பி.​ராஜா யாராலும் செய்ய முடி​யாத நல்ல திட்​டங்​களை​யெல்​லாம் நிறைவேற்றி தந்​துள்​ளார்.

அவர் நன்றி அறி​விப்​பின்​போது சங்​கடப்​பட்டு பேசி​யதை அறிந்​து, நானே அவரை தொடர்பு கொண்​டு, அரசி​யலை​யும் தாண்டி நமது நட்பு தொடர வேண்​டும் என கேட்டு கொண்​டேன்.

அடுத்த 5 ஆண்​டு​களில் மக்​களின் கோரிக்​கைகளை​ நிறைவேற்றி தரு​வதை எனது கடமை​யாக கொண்டு செயல்​படு​வேன் என தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>மன்னார்குடியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ எஸ்.காமராஜ்.</p></div>
வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 பேர் கைது - நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in