‘‘கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்’’ - மாணிக்கம் தாகூர் எம்பி

மாணிக்கம் தாகூர் எம்பி

மாணிக்கம் தாகூர் எம்பி

Updated on
1 min read

சென்னை: “கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்ட நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸின் சில தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் என்று திமுகவை வலியுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாகவே திமுவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, ஆட்சியில் பங்கு என்ற வாதம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனிடையே, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006-யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மாணிக்கம் தாகூர் எம்பி </p></div>
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய திருத்தங்கள்! - அமெரிக்கா நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in