காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் இல்லை: மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்

காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் இல்லை: மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்
Updated on
1 min read

சென்னை: தமிழக காங்​கிரஸ் கமிட்​டி​யின் புதிய தலை​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்ள மாணிக்​கம் தாகூர், சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: சத்​தி​யமூர்த்தி பவனில் 78 மாவட்ட காங்​கிரஸ் கமிட்டி தலை​வர்​களின் முழு நாள் ஆய்​வுக் கூட்​டம் நாளை நடை​பெற உள்​ளது.

கட்​சி​யின் அமைப்பு ரீதி​யான நிலை மற்​றும் மாற்​றங்​கள் குறித்து இதில் விவா​திக்​கப்​படும். தமிழகத்​தில் 59 வருடங்​களுக்​குப் பிறகு நாங்​கள் ஆட்​சி​யில் பங்கு பெற்​று, அமைச்​சர​வை​யில் இடம் பிடித்​துள்​ளோம். எங்​களது இரண்டு அமைச்​சர்​களின் செயல்​பாடு​கள் ஒவ்​வொரு காங்​கிரஸ்​காரனின் மரி​யாதையை​யும் உயர்த்​தும்.

காங்​கிரஸில் எந்​தவொரு உட்கட்சிப் பூசலோ அல்​லது தனித்​தனி அணி​களோ கிடை​யாது. இங்கு இருப்​பது ஒரே ஒரு அணி​தான், அது ராகுல் காந்​தி​யின் அணி​தான். கொள்​கைகளைத் தெளி​வாக, தைரிய​மாக எடுத்​துச் சொல்​வோம்.

சீண்​டு​பவர்​களுக்கு அதே வேகத்​தில் பதில் சொல்​ல​வும் தயங்க மாட்​டோம். மக்​கள் பிரச்​சினை​களை அரசின் கவனத்​துக்​குக் கொண்டு சென்று தீர்வு காண்​போம்.

இன்​னும் 3 மாதங்​களில் ஆட்சி கவிழ்ந்து தேர்​தல் வரும் என்று எதிர்க்​கட்​சி​யினர் கூறு​வது, தேர்​தலில் தோற்ற அதிர்ச்​சி​யால் பேசும் வார்த்​தைகள். எந்​தத் தேர்​தல் வந்​தா​லும் எங்​கள் கூட்​ட​ணி​தான் ஜெயிக்​கும்.

பழனி​சாமியை முதல்​வ​ராக்க ஸ்டா​லின் முயன்​ற​தாகக் கூறப்​படும் பஞ்​சா​யத்​துகளுக்​குள் நான் போக விரும்​ப​வில்​லை. அதே​போல், அண்​ணா​மலைக்கு எதி​ராகத் தொடர்ந்த வழக்கை டி.ஆர்​.​பாலு வாபஸ் பெற்​றது குறித்​தோ, கம்​யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் குறித்து முரசொலி வைக்​கும் விமர்​சனங்​கள் குறித்தோ காங்​கிரஸ் கவலைப்​பட​வில்​லை.

இடைத்​தேர்​தல் குறித்​து அறி​விப்பு வெளி​யிட்​ட​வுடன், யார் யார் ‘அண்​டர்​கிர​வுண்ட் கூட்​டணி’ வைத்​திருக்​கிறார்​கள் என்​பது தெரி​யவரும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் இல்லை: மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்
உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை: தேர்வு வாரியத் தலைவர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in