பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவர்: மலேசிய பிரதமர் அன்வர் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவர்: மலேசிய பிரதமர் அன்வர் புகழாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​றுள்ள மலேசிய பிரதமர் அன்​வர் இப்​ராகிமை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​தார்.

அப்​போது பாது​காப்​பு, செமி கண்​டக்​டர், உள்​கட்​டமைப்​பு, டிஜிட்​டல் பொருளா​தா​ரம், எரிசக்தி உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் இணைந்து பணி​யாற்​று​வது குறித்து இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர்.

அப்​போது, சபா மாகாணம் கோட்டா கின​பாலு பகு​தி​யில் இந்​திய துணைத் தூதரகம் அமைக்க முடிவு எடுக்​கப்​பட்​டது. முன்​ன​தாக, மலேசிய பிரதமர் அன்​வர் கூறும்​போது, “பிரதமர் மோடி மிக​வும் பிரபல​மான தலை​வ​ராக இருக்​கிறார்.

அவருக்கு வாழ்த்​துகளை தெரிவிக்​கு​மாறு பல்​வேறு தரப்​பினர் எனக்கு தொடர்ந்து குறுந்​தகவல்​களை அனுப்பி வரு​கின்​றனர்” என்​றார்.

பாஜக மூத்த தலைவர் ஸ்மிருதி இரானி சமூக வலைதளத்​தில், வெளியிட்ட பதிவில், “சர்​வ​தேச அளவில் பிரதமர் மோடி அலை பரவுகிறது” என்று தெரி​வித்​துள்​ளார்​.

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவர்: மலேசிய பிரதமர் அன்வர் புகழாரம்
மேற்கு ஆசிய போருக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in