“பெண்கள் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் திமுக அரசு அநீதி” - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

கோவை​யில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில் பேசிய ஆந்​திர முதல்வர் சந்​திர​பாபு​ நா​யுடு. உடன், முன்​னாள்​ அமைச்​சர்​ எஸ்​.பி.வேலுமணி. படம்​: ஜெ.மனோகரன்

கோவை​யில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில் பேசிய ஆந்​திர முதல்வர் சந்​திர​பாபு​ நா​யுடு. உடன், முன்​னாள்​ அமைச்​சர்​ எஸ்​.பி.வேலுமணி. படம்​: ஜெ.மனோகரன்

Updated on
1 min read

பெண்​கள் இடஒதுக்​கீடு மற்​றும் தொகுதி மறு​வரையறை மசோதா விவ​காரத்​தில் திமுக அரசு அநீதி இழைத்​துள்​ளது என ஆந்​திர மாநில முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றம் சாட்​டி​னார்.

கோவை மாவட்​டத்​தில் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை ஆதரித்​து, தொழில்​துறை​யினர் மற்​றும் பல்​வேறு சமு​தாய அமைப்​பினருடன் கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி கோவை தனி​யார் ஓட்​டலில் நேற்று நடந்​தது. இதில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கலந்து கொண்​டார். அவர் பேசுகை​யில், “தமிழகத்​தில் இன்​னும் 15 நாட்​களில் மாற்​றத்தை பார்க்​கலாம். உலக நாடு​களில் 4-வது பொருளா​தார நாடாக இந்​தியா உள்​ளது.

வேலை​வாய்ப்​புக்கு விமான நிலை​யம் மிக​வும் முக்​கி​யம். ஆந்​திர விமான நிலை​யங்​கள் பெரிய அளவில் உள்​ளன. ஆனால் கோவை​யில் விமான நிலைய பணி கிடப்​பில் கிடக்​கிறது. வரும் தேர்​தலில் திமுக தோற்க வேண்​டும். தமிழ்​நாடு ஜெயிக்க வேண்​டும்” என்​றார்.சந்​திர​பாபு நாயுடு​வுக்கு நேற்று பிறந்​த​நாள் என்​ப​தால், அவருக்கு அங்கு கூடி​யிருந்த தொழில​திபர்​கள், முக்​கிய பிர​முகர்​கள் மற்​றும் அரசி​யல் கட்​சி​யினர் அவருக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​தனர்.

தொடர்ந்​து, செய்​தி​யாளர்​களிடம் சந்​திர​பாபு நாயுடு கூறிய​தாவது: மத்​தி​யில் பிரதமர் மோடி தலை​மை​யில் நிலை​யான வளர்ச்​சியை பார்க்​கிறோம். இரட்டை இன்​ஜின் அரசாங்​கம் வளர்ச்​சிக்கு வழி​வகுக்​கும். கடந்த 30 ஆண்​டு​களாக 33 சதவீத மகளிர் இட ஒதுக்​கீட்​டுக்​காக போராடி வரு​கிறோம். அதே​போல, தொகுதி மறு​வரையறை​யில் தென்​னிந்​திய மாநிலங்​களுக்கு 50 சதவீதம் அளவுக்கு தொகுதி எண்​ணிக்கை உயரும்.

இதில் திமுக​வுக்கு என்ன பிரச்​சினை? தொகுதி மறு​வரையறை மற்​றும் பெண்​கள் இடஒதுக்​கீடு மசோதா விவ​காரத்​தில் திமுக அரசு அநீதி இழைத்​துள்​ளது. நாட்​டின் பெண்​கள் தோற்​கடிக்​கப்​பட்​டுள்​ளனர். பிரதமர் மோடி ஆட்சி இருக்​கும்​ போது, கங்​கை-​காவிரி இணைப்பு சாத்​தி​யம்.இவ்​வாறு அவர் கூறினார். கூட்​டத்​தில் வேட்​பாளர்​கள் எஸ்​.பி.வேலுமணி, அம்​மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்​.ஜெய​ராம், பி.ஆர்​.ஜி.அருண்​கு​மார், கந்​த​சாமி, வானதி சீனி​வாசன் பங்​கேற்​றனர்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை சந்திரபாபு நாயுடு சென்னை வந்தார். அண்ணாநகர், வில்லிவாக்கம், தியாகராய நகர் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கோகுல இந்திரா, எஸ்.ஆர் விஜயகுமார், சத்ய நாராயணன் ஆகியோரை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்தார்.

<div class="paragraphs"><p>கோவை​யில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில் பேசிய ஆந்​திர முதல்வர்&nbsp;சந்​திர​பாபு​ நா​யுடு. உடன், முன்​னாள்​ அமைச்​சர்​ எஸ்​.பி.வேலுமணி. படம்​: ஜெ.மனோகரன்</p><p></p></div>
மோடிக்கு தொடர் தோல்வி பரிசளிக்கப்படும்: நாங்குநேரியில் ராகுல் காந்தி விருப்பம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in