அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 47 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

நாளை முதல் 5 நாட்கள் அமல்
அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 47 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

அரக்கோணம்: அரக்கோணம் யார்டில் ரயில்வே பொறியியல் பணி நடைபெற உள்ளதால், 47 மின்சார ரயில்களின் சேவையில் நாளை முதல் வரும் 12ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அரக்கோணம் - திருத்தணிக்கு நாளை (8ம் தேதி) முதல் வரும் 12ம் தேதி வரை அதிகாலை 4, 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி - அரக்கோணத்துக்கு மேற்கண்ட நாட்களில் இரவு 9.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு அதே நாட்களில் காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய 5 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதி ரத்து: சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு நாளை முதல் வரும் 12ம் தேதி வரை அதிகாலை 4.05, மதியம் 2.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், ஆவடி - அரக்கோணத்துக்கு மேற்கண்ட நாட்களில் காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு காலை 6.30, 9.10, 10.30, முற்பகல் 11, 12.40, மதியம் 1.25, பிற்பகல் 3.45, மாலை 4.45, 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.30, 8.20, 9.10, 10, 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், திருவாலங்காடு அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படும்.

அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு நாளை முதல் வரும் 12ம் தேதி வரை அதிகாலை 3.45, 4.25, 5.25, காலை 6.40, 8.15, 8.55, முற்பகல் 11.15, மதியம் 2.25, பிற்பகல் 3.40, மாலை 4.50, 6, 2 7, 7.25, 8.25, 8.50, 9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், அரக்கோணம்- திருவாலங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த ரயில்கள் திருவாலங்காட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும்.

இது தவிர, அரக்கோணம் - கடற்கரை வரை இயக்கப்படும் 4 மின்சார ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 47 மின்சார ரயில்களின் சேவை யில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. மேலும், நாளை முதல் வரும் 12ம் தேதி வரை காலை 6.20 மணிக்கு திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 47 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
மாற்றங்களை உருவாக்கும் மாவட்டப் புத்தகக் காட்சிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in